பேச்சு:அறிவுப்பல்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனைக் கடைப்பல் எனலாமே. கடைவாயில் கடைசியாக முளைக்கும் பல். அறிவுப்பல் என்பது செயற்கையான, ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பாக இருப்பது வேண்டுமா? இப்படிப் பகுதி-பகுதியாய் மொழி பெயர்த்த சொற்களை calque என்பர். ஈயடிச்சான் காப்பியாக இப்படிச் செய்ய வேண்டாம். முதுமைப்பல், கடைப்பல் என்று ஏதேனும் பொருத்தமாகக் கூறலாம் என்று கருதூகிறேன்.--செல்வா 17:23, 21 ஜூலை 2010 (UTC)

சிறு அகவையில் முளைக்காமல், பின்னர் முளைப்பதால், முதுமைப்பல் எனலாமா? அதாவது ஞானப்பல், அறிவுப்பல் என்பதெல்லாம் நேரடியான மொழி பெயர்ப்பாக இருப்பதாகத் தோன்றியது. தமிழில் இதனை ஆசறுதிப்பல் என்றும் கூறுவர். பார்க்கவும். கடைக்கடைப்பல், கடையிறுதிப்பல் என்றெல்லாமும் கூறலாம். அறிவுப்பல் என்பதும், ஞானப்பல் என்பதும் ஏனோ தமிழில் சரியான உணர்வைத் தராதது போல் தோன்றுகின்றது. பொருள் கொள்ளும் முறைமை தமிழில் சற்று வேறாக இருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.--செல்வா 17:55, 21 ஜூலை 2010 (UTC)
முதுமைப்பல் என்பதைவிட, முதிர்ப்பல், முதிர்ச்சிப்பல், முதிர்கைப்பல் எனலாம்.--செல்வா 18:01, 21 ஜூலை 2010 (UTC)

கேள்வி[தொகு]

ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதியில் (Oxford English Dictionary). The hindmost molar tooth on each side of both upper and lower jaws in man, என்று கொடுத்துள்ளதே. இது ஆண்களுக்கு மட்டும் கீழ்த்தாடையில் முளப்பதா? (இது சரியான குறிப்பா?)--செல்வா 18:10, 21 ஜூலை 2010 (UTC)

மருத்துவத் துறையில் சில நேரங்களில் man என்பதை மனிதர்கள் என்று பொதுவாகக் குறிக்கப் பயன்படுத்துவர். concise oxford dictionary (eleventh edition) இல் தரப்பட்டுள்ள விளக்கம் : each of the four hindmost molars in humans, which usually appear at about the age of twenty.--Karthi.dr 07:54, 22 ஜூலை 2010 (UTC)

பாராட்டுகள்[தொகு]

நல்ல ஒரு கட்டுரை. புதிய செய்திகளும் தாங்கியுள்ளன (எ.கா.நிப்பான் ஆய்வாளர்களின் குருத்தணுக்கள் பெறும் கண்டுபிடிப்பு). மிக்கப் பாராட்டுகள் மரு. கார்த்தி!--செல்வா 18:08, 21 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவுப்பல்&oldid=562227" இருந்து மீள்விக்கப்பட்டது