பேச்சு:அறிவுசார் சொத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவுசால் என்ற சொல் உள்ளதா? இதன் பொருள் என்ன?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:07, 20 சூலை 2014 (UTC)[பதிலளி]

IPAB (Intellectual Property Appellate Board) என்பதைத் தமிழில் குறிப்பிடும் போது "அறிவுசால் சொத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்" என்றே பிரபா ஸ்ரீதேவன் பயன்படுத்துகிறார். அவரது கட்டுரையான நோவார்டிஸ் மருந்து நிறுவனக் கட்டுரையிலும், அவரது உரையிலும் ’அறிவுசால்’ என்றே பயன்படுத்தியதால் அப்படியே மாற்றப்பட்டது. http://www.dinamani.com/editorial_articles/2013/11/20/நோவார்டிஸ்-இந்தியாவின்-பொற/article1900335.ece

அறிவுசால், அறிவுசார் இரண்டும் ஒரே பொருள் தருவன என்பது எனது புரிந்துணர்வு.

யாரேனும் தமிழறிஞர்கள் இந்த சந்தேகத்தைத் தீர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்.

--Kuzhali.india (பேச்சு) 08:24, 20 சூலை 2014 (UTC)[பதிலளி]

சால் என்ற சொல் சால்பு என்பதைக் குறிக்கும் என நினைக்கிறேன். சால்பு என்ற சொல்லுக்கும் சான்றோர் என்ற சொல்லுக்கும் தொடர்பிருக்கலாம். சால்பு என்பது சான்றோர் இயல்பை குறிக்கிறது. சார் என்ற சொல் சார்பை குறிக்கும். ’அறிவுசார்’ என்பது அறிவு சார்ந்த/ அறிவுடன் தொடர்புடைய என்ற பொருளில் வரும். அறிவுசார் சொத்து என்றால் நிலம், நீர் போல் அசையாச் சொத்தாக அல்லாமல் அறிவைப் பயன்படுத்தியதால்(அறிவை சார்ந்ததால்) வந்த சொத்து என்று பொருள் வரும் என்று கருதியே மாற்றினேன். சார்பு என்பது சால்பு என்பதைக் காட்டிலும் அதிக பயன்பாட்டில் உள்ளதும், எளிதில் புரியும்படியும் இருக்கும் என்று கருதினேன். உரிய விளக்கம் கிடைத்தவுடன் கட்டுரைத் தலைப்பிற்கு வழிமாற்றையும் ஏற்படுத்திவிடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:14, 20 சூலை 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அறிவுசார்_சொத்து&oldid=1695172" இலிருந்து மீள்விக்கப்பட்டது