பேச்சு:அரைஞாண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பெண்கள், இந்து அல்லாத பிற மதத்தார் இதை அணியும் வழக்கம் உள்ளதா? நம் விக்கிபீடியர் யாராவது இதற்குப் படம் எடுத்து இணைத்தால் நன்று. கோவணப் படத்துக்கே வலை வீசித் தேடி ஒரு படம் தான் சிக்கியது :) . இதை அணிவதின் சமய, தத்துவப் பின்புலத்தையும் யாரேனும் (njaanam?) விளக்கினால் நன்று. --ரவி 16:07, 21 மார்ச் 2007 (UTC)

அரைஞாண் கயிறு என்பதே சரியானது என நினைக்கிறேன். அரைஞாண் தாலி போன்றவை பற்றி எங்கோ வாசித்த ஞாபகம். அது தமிழர் முற்காலத்தில் அணிந்த அணிகலன்களில் ஒன்றா? (இதை வாசித்தவுடன் நற்கீரன் நூல்களிலும் இணையத்திலும் தேடத் தொடங்கி விடுவார் :-) தமிழர் நகைகள் என்ற பகுப்பு உருவானாலும் ஆச்சரியமில்லை:)) செல்வா, மயூரநாதன் போன்றோர் தகவல்களைச் சேர்த்தால் நன்று. ரவி உங்களது புகைப்படக் கருவி எங்கே? :) --கோபி 16:10, 21 மார்ச் 2007 (UTC)

கோபி, நான் modeling செய்வதில்லை :)--ரவி 16:24, 21 மார்ச் 2007 (UTC)

முகம் காட்டத்தான் வேண்டுமா என்ன? :) அரைஞாண் கயிறு என்பதல்லவா சரியானது? --கோபி 16:26, 21 மார்ச் 2007 (UTC)

அரைஞாண் என்றே புழக்கத்தில் இருந்ததாக நினைவு. அறுணாக்கொடி என்றும் சொல்லுவார்கள் (சரியான உச்சரிப்பு தெரியவில்லை).--Kanags 20:23, 21 மார்ச் 2007 (UTC)


அரைஞாண் கயிறு என்பதுதான் சரியான சொல். அரைநாண் கயிறு என்றும் சொல்லலாம். வில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். கயிறு என்று சேர்ப்பது தேவையற்றது. இதனை அருணாக்கயிறு, அர்ணாக்கயிறு என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். அரைஞாண் என்று மூன்று சுழி ணகர ஒற்று இருக்குமாறு பக்கத்தின் தலைப்பை மாற்றவேண்டும்.--செல்வா 21:07, 21 மார்ச் 2007 (UTC)

செல்வா, உங்கள் கருத்து சரி. அகரமுதலியிலும் அரைஞாண். அரைநாண் என்றே கொடுக்கப்பட்டிருக்கிறது--ரவி 22:13, 21 மார்ச் 2007 (UTC)

இந்து சமயத்திற்கும் அரைஞாணுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை ரவி. இது ஓர் இந்தியப் பழக்கம், தமிழ்நாட்டில் கட்டாயம் உண்டு (இப்பொழுது குறைந்து வருகின்றதோ என்னவோ). இது அணிவதற்கு இரு காரணங்கள். ஒன்று, கீழ் உடைக்கு ஓர் பிடிமானம் (கோவனம் முதலியன). ஒரு வகையான அழகு (ஆடை போன்றது - அம்மணமாக இல்லாதது போல் ஓர் உணர்வு (!!)- உடலை இரு பகுதியாய்ப் பிரித்துக் காட்டுவதால். அர்ணாக்கயிறு கூட இல்லாமல் திரிகிறான் பாரு என்று திட்டுவது கேட்டிருக்கலாம் - அரைஞாண் கயிறு இல்லாமல் இருப்பது அம்மணம். அரைஞாண் இருந்தால் அப்படி இல்லை !)--செல்வா 00:31, 22 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரைஞாண்&oldid=1148429" இருந்து மீள்விக்கப்பட்டது