பேச்சு:அரிசனப் பேச்சுத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிசனர் என்று தனியே ஒரு சாதியினர் இல்லை. மேலும் அரிசனர் அனைவரும் ஒரெ இடத்தில் இருப்பவர்களும் இல்லை. சுமார் 50சாதிகள் முன்பு அரிசனர் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியினர் ஆகியோர் அரிசன்ர்/தலித் எனப்படுபவரில் பெரும்பகுதியானவர்கள். இவர்களின் பேச்சு வழக்கு பெரிதும் மாறுபடுகின்றன. ஆதிதிராவிடர்/பறையர் வட மாவட்டங்களிலும், தேவேந்திர குல வேளாளர்/பள்ளர் தென் மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். அருந்ததியர்/சக்கிலியர் தெலுங்கு பேசுபவர்கள். இது தமிழ்நாட்டு நிலை. இலங்கையில் எப்படி என்று தெரியவில்லை. எனவே இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள “அரிசனத் தமிழ்” என்பது இவர்களுள் குறிப்பிட்ட ஒரு பகுதியனருடையாகத் தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். தெளிவு படுத்த வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:20, 7 சூலை 2011 (UTC)

எத்னொலோக் அறிக்கையிலும் இது தமிழின் வட்டார வழக்கில் ஒன்றாகச் சுட்டப்படுகிறது. அரிசனப் பேச்சுத் தமிழ் என்பது சேரி வாழ் மக்களின் பேச்சுத் தமிழை முதன்மையாகச் சுட்டுகிறது எனலாம். தகுந்த மேற்கோள்களை விரைவில் சேர்க்கிறேன். நன்றி. இலங்கையில் இவ்வாறு வேறுபாடு இல்லை என்றே நினைக்கிறேன். --Natkeeran 04:23, 7 சூலை 2011 (UTC)

அரிசனப் பேச்சுத் தமிழ் என்று ஏதுமில்லை[தொகு]

அரிசனப் பேச்சுத் தமிழ் என்று ஒன்றை வகைப்படுத்துவது ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான, சாதிய உள்நோக்கம் கொண்ட ஆய்வாகும். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். அந்தந்த பகுதிகளில் அந்தந்த வட்டார பேச்சு வழக்குகளையே பேசுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்கள் சற்று வேறு விதமாக பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, இந்த வேறுபாடு அந்த வட்டாரத்திலுள்ள அத்தனை வகுப்புகளுக்கும் சாதிகளுக்கும் பொருந்தும். அதாவது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள அத்தனை வகுப்பினரும் மற்றும் சாதியினரும், பெருமளவில் ஒரே மாதிரியாகவும், சிறிதளவில் வேறுபட்டும் பேசுகின்றனர். ஆகவே இந்த வகைப்பாடு அபத்தமானது.

மற்றொன்று, "அரிசனம்" என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் சொல்லாக கருதப்படும் நிலையில் அத்தகைய சொல்லை பயன்படுத்துவது சரியன்று. Manuel Amalraj G (பேச்சு) 05:35, 27 செப்டம்பர் 2020 (UTC)