பேச்சு:அரபு-இசுரேல் முரண்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபு-இசுரேல் முரண்பாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரைக்கான வரைபடம் ஆங்கிலத்தில் உள்ளது. இதை தமிழாக்கம் செய்ய வேண்டுமா? அல்லது அப்படியே பாவிக்கலாமா? தமிழாக்கம் செய்து (graphical editing) மீள் பதிவேற்றம் செய்யும்போது அது என்னுடைய சொந்த ஆக்கமாகாதல்லவா? அப்படியாயின் என்ன செய்யலாம்? --Anton (பேச்சு) 09:26, 10 மார்ச் 2012 (UTC)

தமிழாக்கம் செய்யலாம். அவ்வாறு உருவான தமிழாக்கப் பதிப்பு உங்களுடைய சொந்த ஆக்கமாகும். அதைப் பதிவேற்றியபின்னர் விளக்கத்தில், மூலத்தை குறிப்பிட்டு விடுங்கள் (attribution). அவ்வாறு செய்து விட்டால் பதிப்புரிமை சிக்கல் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 09:30, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி! தமிழாக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதில் பதிப்புரிமை சிக்கல் இல்லையென நினைக்கிறேன். --Anton (பேச்சு) 11:57, 10 மார்ச் 2012 (UTC)
அன்டொன், மிக அருமையாக ஆக்கியிருக்கின்றீர்கள். காஸா என்பதை காசா என்று திருத்த முடியுமா? தமிழில் காசு, கொசு, பேசு என்பது போன்றே காசா என்பது போதிய அளவு நெருக்கமான ஒலிப்பு தரும். --செல்வா (பேச்சு) 13:14, 10 மார்ச் 2012 (UTC)
தகவல் பெட்டியில் காசா என்று மாற்றி விட்டேன். படத்தில் காசாப் பகுதி என்றுள்ளது. படத்திலும் மாற்றம் தேவையென்றால் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 13:29, 10 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி! விரைந்து ஆக்கிவிட்டீர்கள்!! நன்றி! --செல்வா (பேச்சு) 14:21, 10 மார்ச் 2012 (UTC)

தமிழ் பதங்கள் தேவைப்படுகின்றன[தொகு]

இக்கட்டுரையில் காணப்படும் சில எபிரேய, ஆங்கில சொற்களுக்காக சரியான தமிழ் பதங்கள் தேவைப்படுகின்றன. எனக்குத் தெரிந்த எபிரேயத்தின் அடிப்படையில் (சிறிதளவுதான்)அவற்றை அப்படியே மொழி பெயர்த்துள்ளேன். சில விவிலியத்தில் உள்ளன. உதாரணத்திற்கு சில சொற்கள் பின்வருமாறு.

Torah - தோரா
Canaan - கானான்
Theodor Herzl - தியோடர் கேர்ல் (தியோடர் எர்ல்/எர்சில் அல்லது தியோடர் ஃகெர்ல்/ஃகெர்சில்
Likud party - லிக்குட் கட்சி (லிக்குடுக் கட்சி/இலிக்குடுக் கட்சி)
Cave of the Patriarchs - பிதாக்களின் குகை (தந்தையார்களின் குகை/தந்தைமார்களின் குகை)
Temple Mount - யூத தேவாலயம்
Dome of the rock - டோம் ஒஃப் த ரொக் (தோம் ஆவ் த ராக்/பாறைக் குவிமாடம்)
Israeli War of Independence - இசுரேலிய சுதந்திர போர் (இசுரேலிய விடுதலைப் போர்)
Retribution operations - பழிக்குப்பழி இராணுவ நடவடிக்கைகள் (பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள்)
War of Attrition - தேய்வுப் போர் (தேய்வழிவுப் போர்/அற்றழிவுப் போர்)
Yom Kippur War - யொம் கிபூர் போர் (யோம் கிப்பூர்ப் போர்/இயோம் கிப்பூர்ப்போர்)
First Intifada - முதலாவது இன்டிபாடா (முதல் தடுப்பெழுச்சிப் போர்)
உதவி செய்யவும். நன்றி! --Anton (பேச்சு) 12:31, 17 மார்ச் 2012 (UTC)

மேலே உள்ளவை ஏறத்தாழ சரியாகவே உள்ளன. சிலவற்றை சற்றே வேறுவிதமாகவும் எழுதலாம். அவற்றாஇப் பிறைக்குறிகளுக்குள் மேலே இட்டுள்ளேன்.

  • என் பரிந்துரைகளைப் அடைப்புக்குறிகளுக்குள் தந்துள்ளேன்.--செல்வா (பேச்சு) 14:24, 17 மார்ச் 2012 (UTC)
நன்றி!! Intifada என்பதை தடுப்பெழுச்சிப் போராட்டம் என்று அழைக்கலாமா? ஏனென்றால், அது வெறுமனே போராக மட்டுமில்லாமல் ஆர்ப்பாட்டம் இசுரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இசுரேல் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறிதல் என்று பல வடிவங்களை கொண்டு காணப்பட்டது. --Anton (பேச்சு) 14:40, 17 மார்ச் 2012 (UTC)
ஆம், போராட்டம் எனலாம். --செல்வா (பேச்சு) 14:42, 17 மார்ச் 2012 (UTC)
நன்றி! Y ஆயிற்று --Anton (பேச்சு) 15:03, 17 மார்ச் 2012 (UTC)

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்[தொகு]

http://meta.wikimedia.org/wiki/List_of_articles_all_languages_should_have இதிலிருந்துதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேன். தற்போது முடித்துவிட்டேன்(?). இக்கட்டுரை விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பகுதியில் சேர்க்க வேண்டுமாயின் சேர்த்துவிடுங்கள். --Anton (பேச்சு) 12:40, 17 மார்ச் 2012 (UTC)

பாராட்டுகள்[தொகு]

"Anton" நீங்கள் மிக் அருமையாக, மிக விரிவாக எழுதி நிறைவு செய்திருக்கின்றீர்கள் இக் கட்டுரையை! பாராட்டுகள். சிறு சிறு திருத்தங்கள் இருந்தால் செய்துவிடலாம். --செல்வா (பேச்சு) 14:08, 17 மார்ச் 2012 (UTC)

நன்றி!திருத்தங்கள் தேவையுள்ளது என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 14:31, 17 மார்ச் 2012 (UTC)
நானும் திருத்தி உதவுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:38, 17 மார்ச் 2012 (UTC)