பேச்சு:அய்யாவழி கட்டுரைகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வாறான கட்டுரைகளுக்கெனப் பகுப்புகள் இருக்கும் போது இது போன்ற பட்டியல்கள் எதற்காக? இவ்வாறு தொடருமானால் அனைத்துப் பகுப்புகளுக்கும் கட்டுரைகள் உருவாக்கி விடுவார்கள். கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டலாம்.--Kanags \உரையாடுக 07:11, 7 பெப்ரவரி 2014 (UTC)

மேலே கனகு கூறியிருக்கும் கருத்தை வழிமொழிகிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:07, 7 பெப்ரவரி 2014 (UTC)
வலைவாசல்:இந்து சமயம்/தலைப்புகள் என்பதை இந்து சமய வலைவாசலுக்காக உருவாக்கும் பொழுது இக்கட்டுரைக்கான தேவை ஏற்பட்டது. en:Portal:Hinduism/Topics என்ற ஆங்கிலத்தின் மூலத்தினைக் கொண்டே இதனை வடிவமைத்தேன். இது போன்ற எண்ணற்ற பட்டியல் கட்டுரைகளை வலைவாசலுக்காகவும், வார்ப்புருத் தேவைக்காவும் உருவாக்கியுள்ளேன். இது விக்கி நடைமுறையை மறுத்தால் அனைத்தையும் நீக்கிவிடலாம். நான் தொடங்கிய கட்டுரைகளில் பல்வேறு கட்டுரைகளை இதைப் போன்றே இருக்கின்றன. பகுப்புக்கும் இவ்வாறான தொகுப்பு கட்டுரைக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு, இன்னும் எழுதப்படாத கட்டுரைகளையும் இணைப்பதே ஆகும். தற்போது நீக்கல் வார்ப்புருவை கட்டுரையிலிருந்து எடுத்துவிட்டு குறுகிய கால நீக்கல் வார்ப்புருவை இட்டுள்ளேன். இவ்வாறான கட்டுரைகளை நீக்கம் செய்யவேண்டுமானால் இவைகளுக்கு மாற்றாக பகுப்புகளையே பயன்படுத்திக் கொள்ளலாமா என்ற ஆலோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:18, 7 பெப்ரவரி 2014 (UTC)
ஓ அப்படியா, அப்படியானால் இதன் தலைப்பைப் பட்டியல் என்றில்லாமல் வேறு தலைப்பிடலாமா எனப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 11:21, 7 பெப்ரவரி 2014 (UTC)
அல்லது இவ்வாறான கட்டுரைகளை நீக்கி விட்டு அவற்றுக் பதிலாக அவற்றின் பகுப்புகளை வலைவாசலில் இணைப்புகளாகக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 11:37, 7 பெப்ரவரி 2014 (UTC)
List of Ayyavazhi-related articles என்ற பெயரை முன்பு வைத்திருந்தார்கள் தற்போது Outline of Ayyavazhi என்று வைத்திருக்கிறார்கள். Outline என்பதைக் குறிக்கின்றது போல ஏதேனும் பெயரை முன்மொழியுங்கள், அவ்வாறு அனைத்து கட்டுரைகளுக்கும் மாற்றிவிடுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:58, 7 பெப்ரவரி 2014 (UTC)