பேச்சு:அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இக்கட்டுரையின் தலைப்பை "அயனி" என்று மாற்ற வேண்டும். ஏனெனில் இது ஆங்கிலத்தின் ஒலிப் பெயர்ப்பாக உள்ளது. அயனி என்பதே தமிழ்ப் படுத்தப்பட்ட சொல்லாகும். தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் அயனி என்றே உள்ளது. மாற்ற வேண்டும்!
அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 16:44, 6 திசம்பர் 2010 (UTC)[பதில் அளி]

நன்றி சூரியப்பிரகாசு.

தமிழ் நாட்டில் அயனி என வழங்குதே உண்டு ஆயின் அதை அயனி எனப் பெயரிடுவது அவசியமாகும். ஈழத்தில் அயன் என்ற பதமே வழக்கில் உள்ளது. எனவே பக்கவழிமாற்று செய்யலாம். ஆயினும் கட்டுரையின் உள்ளடக்கத்திலும் இந்த தாகவல்களைத் தெரிவிப்பது தேவை எனப்படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 10:41, 8 திசம்பர் 2010 (UTC)[பதில் அளி]

நன்றி! இக்கட்டுரையின் தலைப்பை நான் "அயனி" என்ற தலைப்புக்கு மாற்றி விடுகிறேன். மேலும் அதைப் பற்றி கட்டுரையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறேன்!

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 10:45, 8 திசம்பர் 2010 (UTC)[பதில் அளி]

தமிழகத்திலும் ஈழத்திலும் வெவ்வேறு பயன்பாடுகள் இருந்தால் இரண்டு வழக்குகளையுள் கட்டுரையின் உள்ளே தெளிவாக விளக்கி விடுவது நன்று.--சோடாபாட்டில் 11:00, 8 திசம்பர் 2010 (UTC)[பதில் அளி]

அயனி/அயன் என்பது மின்மம் உள்ள ஒன்று. ஆகவே மின்மி என்றும் சொல்லலாம். இது அணுத்துகளாக இருக்க வேண்டும் என்பதல்ல. பல அணுக்கள் கூடிய பருமூலக்கூறாகவும் இருக்கலாம். மின்மி என்பது மின்மம் உள்ள துகள் அல்லது அணுக்கூறு அல்லது மூலக்கூறாக இருக்கலாம். எதிர்மின்னி நீங்கிய அணுவாக இருந்தால் மின்மவணு என்றே கூறலாம். ஆங்கிலத்தில் இருப்பது போலவே தமிழில் இருக்கத் தேவை இல்லை. --செல்வா 15:24, 8 திசம்பர் 2010 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அயனி&oldid=645030" இருந்து மீள்விக்கப்பட்டது