பேச்சு:அயனமண்டல நோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயனமண்டல நோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்த கட்டுரையின் தலைப்பை அயனமண்டல தொற்றுநோய் என மாற்றலாமா? --கலை 12:04, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

காரணம்? --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:04, 21 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
அனேகமாக அயனமண்டல நோய்கள் என அழைக்கப்படுபவை தொற்றுநோய்களாகவே இருக்கின்றன. ஆனால் எல்லா அயனமண்டல நோய்களும் தொற்றுநோய்கள்தானா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. யாராவது இதுபற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. --கலை 11:39, 21 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
பொதுவான பெயரீட்டு வழமை (எல்லா மொழிகளிலும் அயனமண்டல நோய் என்றே உள்ளது) காரணமாக இக்கட்டுரை அயனமண்டல நோய் என்று இருப்பதே சிறந்தது, அயனமண்டலத் தொற்றுநோய் என்பது இதன் ஒரு பகுதி எனலாம்; ஆனால் மருத்துவ நடைமுறையில் அயனமண்டலத் தொற்றுநோய் "அயனமண்டல நோய்" என்று அழைக்கப்படுகின்றது. சில (தொற்று உள்ள அல்லது தொற்று அல்லாத) தோல் நோய்கள் அயனமண்டலத்தில் ஏற்படும் நோயாக இருந்தாலும் tropical diseases எனும் பிரிவுக்குள் அடக்கப்படுவது இல்லை, மாறாக "tropical skin diseases" என்று கூறப்படுவது உண்டு, பங்கசுக்களால் ஏற்படும் தொற்று நோய்கள் இதில் அடங்கும். சில (Leishmaniasis போன்ற) tropical diseases தோல் நோய்களை உண்டாக்குகின்றது என்பது புறக்கணிக்கத்தக்கது எனலாம்.

இதைவிட, "தொற்றுநோய்" எனும் வரைவிலக்கணத்துக்குச் சார்பாக சில "அயனமண்டலத் தொற்றுநோய்"கள் அமையவில்லை என்று நான் கருதுகிறேன். குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பை தொற்று நோய் என்று அழைத்தல் உகந்தது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:55, 21 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

செந்தி! நீங்கள் கூறுவது சரியெனவே தோன்றுகின்றது.--கலை 22:24, 21 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அயனமண்டல_நோய்&oldid=933859" இலிருந்து மீள்விக்கப்பட்டது