பேச்சு:அமர்வாடா (சட்டமன்றத் தொகுதி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Thiyagu Ganesh: தமிழல்லாத பிற மொழிக் கட்டுரைகள் எழுதும்போது அதன் ஆங்கிலப் பெயரையும், மூல மொழிப் பெயரையும் முதல் வரியில் கொடுப்பது வழக்கம். மூல மொழிப் பெயர் தெரியாவிட்டாலும் ஆங்கிலப் பெயர் தருவது கட்டாயம். மத்தியப் பிரதேசத்தில் அமர்வாடா என்ற பெயரில் தொகுதி இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல்வேறு உச்சரிப்புகளில் தேடிப்பார்த்து விட்டேன். ஆங்கிலப் பெயரை தந்தால் தேடுவது இலகுவாக இருக்கும். நன்றி. @Info-farmer and Selvasivagurunathan m:--Kanags \உரையாடுக 04:48, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் Kanags இது தொடர்பாக இங்கு கானுங்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் AMARWARA என்று உள்ளது. ஆனால் உச்சரி்ப்பில் அமர்வாடா என்றே உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக CHATTISGARH மாநிலத்தின் பெயரை சட்டீஸ்கட் என்றே அங்கு உச்சரிக்கின்றனர். அதே போல BARWARA என்பதும் பர்வாடா என்றே உச்சரிக்கப்படுகிறது. நன்றி -- ThIyAGU 05:08, 18 சூலை 2017 (UTC)

நான் Amarwada / Amarvada / Amarwadah / Amarvadah எனத் தேடினேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:22, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தேவையற்ற நிரல்கள் ஏன் உங்கள் கட்டுரைகளில் வருகின்றன? மேலும், ஆங்கில விக்கிக் கட்டுரையை மேற்கோளாகக் கொடுக்க முடியாது.--Kanags \உரையாடுக 05:26, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

கவனிக்கிறேன் நன்றி -- ThIyAGU 05:30, 18 சூலை 2017 (UTC)
@Kanags and Info-farmer:அனைத்துப் பிழைகளையும் அனைத்துக் கட்டுரைகளிலும் இவ்வார இறுதிக்குள் நானே சரி செய்கிறேன். @Thiyagu Ganesh: புதிதாக எழுதும் கட்டுரைகளில் இத்தவறுகளை கவனத்தில் கொள்ளுங்கள்; சில நாட்களுக்கு சட்டமன்றத் தொகுதி கட்டுரைகளை எழுத வேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]