பேச்சு:அபுதாபி (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது தமிழில் அபுதாபி என்றே வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறே தலைப்பிட வேண்டும். அரபு மொழியில் Abu Dhabi என்றே அழைக்கப்படுவதாக ஆங்கில விக்கியில் சொல்லப்பட்டிருக்கிறது. அபூ ழபீ என்பது எந்த மொழியில் வழங்கப்படுகிறது?--Kanags \உரையாடுக 04:03, 10 ஆகத்து 2012 (UTC)+1--சண்முகம்ப7 (பேச்சு) 06:35, 10 ஆகத்து 2012 (UTC)


விளக்கம் இல்லை, மீண்டும் அபுதாபி என மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 16:08, 31 அக்டோபர் 2012 (UTC)
மாற்றலாம்.--Kanags \உரையாடுக 20:02, 31 அக்டோபர் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 11:22, 2 நவம்பர் 2012 (UTC)

அபுதாபி என்பது பிழை. அரபு மொழியை ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டும் போது Abu Dhabi என்று எழுதியிருப்பதால் dh என்பது தமிழில் த என்பதாக வந்தாக வேண்டுமென்னும் ஆங்கிலமைய வாதம் தவறானது. அரபு மொழிப் பெயரிலுள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்பதாகத்தான் அரபு மொழிபெயர்ப்பிலும் எழுத்துப் பெயர்ப்பிலும் பன்னெடுங்காலமாக வழங்கப்படுகிறது. அரபு மொழி தெரியாதவர்கள் எழுதும் போது ஏற்படும் தவறுகளிலொன்றுதான் அபுதாபி என்று எழுதியிருப்பது. நான் மேலே சுட்டிக் காட்டிய எழுத்துக்கூட்டல் முறையை அரபு - தமிழ் நேரடி மொழிபெயர்ப்பு நூல்களிற் காணலாம். உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த றஹ்மத் அறக்கட்டளையினர் வெளியிட்ட ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதீ, முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களில் மேற்படி முறையைக் காணலாம்.--பாஹிம் (பேச்சு) 07:25, 10 நவம்பர் 2014 (UTC)