பேச்சு:அன்னை பூபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்புகளில் பட்டப்பெயர் குறித்த விக்கிப்பீடியா கொள்கையை எப்படி வகுக்கலாம்? அன்னை தெரசா, அன்னை பூபதி போன்றவர்களின் சிறப்பை முழுமையாக உணர்கிறேன். ஆனால், யார், எந்த அமைப்புகள் கொடுக்கும் பட்டங்களைத் தலைப்பில் ஏற்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல் தேவை. தவறான எடுத்துக்காட்டுகளைக் காட்டி சின்னச் சின்ன அரசியல்வாதிகளோ சாமியார்களோ தங்கள் பட்டங்களையும் தலைப்பில் தர வேண்டும் என்று சொல்லும் நிலை வரலாகாது--ரவி 14:26, 4 மே 2008 (UTC)[பதிலளி]

ரவி, இது சற்று சிக்கலானது. சில பட்டங்கள் பெயருடன் ஒன்றிப்போனவை. அந்தப் பெயர்களாலேயே அவர்கள் அறியப்பட்டவர்கள். எனது பரிந்துரை, எல்லா நிலைகளிலும் பட்டப் பெயர்களை நீக்கி விட்டு, அந்தப் பெயரை வழிமாற்று செய்யலாம். ஆனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் இந்த நடைமுறை இறுக்கமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி. --Natkeeran 14:30, 4 மே 2008 (UTC)[பதிலளி]
தலைப்பில் தங்கள் பட்டப்பெயரை தர வேண்டும் என்று சொல்லும் நிலை இங்கு வராது என்றே எண்ணுகிறேன்.இத்தலைப்பைப் பொருத்தவரை, பூபதி என்பது ஆணின் பெயர். கட்டுரை அகிம்சை வழியில் செயலாற்றியவர் ஒரு பெண் குறித்தவை என்பதால், அன்னை பூபதி என்ற தலைப்பை மாற்ற வேண்டாமென்றே எண்ணுகிறேன். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்னை_பூபதி&oldid=1089790" இலிருந்து மீள்விக்கப்பட்டது