பேச்சு:அனுராதபுரம் அருங்காட்சியகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூதனசாலை என்பதிலும் பார்க்க அருங்காட்சியகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. வழிமாற்றாக நூதனசாலையை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:42, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

சிறீ அப்படித்தான் நானும் ஆரம்பித்தேன். ஆனால், இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை நூதனசாலைத் திணைக்களம் ஆகியவற்றின் இணையத்தளங்களில் காணும் பட்டியல்களில் நூதனசாலை என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அலுவல் முறைப் பெயர்களைப் பயன்படுத்துவது நல்லது என்ற வகையில் தான் நூதனசாலை என்று பயன்படுத்துகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 08:50, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]
அனுராதபுரம் நூதனசாலை என்ற பெயர் வேறு நிறுவனப் பெயர்கள் போன்று காப்புரிமை கொண்ட பெயர் அல்ல ஆதலால் அனுராதபுரம் அருங்காட்சியகம் (அனுராதபுர அருங்காட்சியகம் என்பது ஏதோ சிங்களப் பெயர் போல் தெரிகிறது) எனப் பெயரிடுவதே நல்லது. அருங்காட்சியகம் என்ற சொல்லை நாம் இங்கு பயன்படுத்துவதால் இச்சொல் இலங்கையில் அதிகமாக பயன்பாட்டுக்கு வரக்கூடும். பாராளுமன்றத்தை இப்போது ஊடகங்கள் பல நாடாளுமன்றம் என்றே எழுதுகின்றன.--Kanags \உரையாடுக 21:10, 21 சூலை 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:02, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
மாற்றிவிடலாம். --மயூரநாதன் (பேச்சு) 02:49, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
அனுராதபுர அருங்காட்சியகம் என்பதே சரி. மரம் வேர், யாழ்ப்பாணம் மாவட்டம் என்று கூறமுடியாது. இங்கு மகரவீறு கெடுதல் வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:57, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
அவசியமானால் இலக்கணம் மீறப்படலாம்.--Kanags \உரையாடுக 08:18, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
I is a student. He am a student. என்று சொல்வது போலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:26, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]
இங்கு இலக்கணத்தை மீற வேண்டிய எவ்வவசியமும் இல்லை. எழுத்துகளின் பெயரைக் குறிப்பிடும்போதும் (டகரம், ணகரம்) நிலைமொழியும் வருமொழியும் பிறமொழிச் சொற்களாக இருக்கும்போதும் (சோடியம் குளோரைடு, தேசிய கீதம்) மட்டுமே இலக்கணத்தை மீறலாம். --மதனாகரன் (பேச்சு) 10:37, 22 சூலை 2015 (UTC)[பதிலளி]