பேச்சு:அனிசேட்டஸ் (திருத்தந்தை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Infobox Saint திருத்துதல் பற்றி[தொகு]

ஜெயரத்தின மாதரசன், இந்த வார்ப்புருவில் "venerated in" என்பது தமிழில் "மதிக்கப்படுவது" என்றுள்ளது. அதை "ஏற்கும் சபை" என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும். நன்றி!--பவுல்-Paul 20:42, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மாற்றியிருக்கிறேன். Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 04:17, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Infobox Saint மற்றும் Infobox Christian leader பற்றி[தொகு]

திரு. பவுல் அவர்களே, Infobox Christian leader-இலேயே புனிதர் பட்டடத் தகவல்களைத் தரலாமே. ஏன் இன்னுமொரு வார்ப்புரு? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:44, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Infobox Saint மற்றும் Infobox Christian leader பற்றி சில கருத்துகள்[தொகு]

  • மாதரசன், "வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர்" பக்கம் பார்த்தேன். இங்கே:[1]. அதில் "புனிதர் பட்டம்" என்னும் பகுதியின் கீழ் இரண்டாம் வரி "venerated" என்பதற்கு தமிழில் "மதிக்கப்படுவது" என்றுளது. அதை "ஏற்கும் சபை" என மாற்றுங்கள்.

அதே பக்கத்தில் "தகவற்சட்ட வகைக் கூறளவுகள்" என்னும் பகுதியிலும் அவ்வாறே திருத்துங்கள்.

மேலும், ஆங்கில விக்கியில் "Pope Anicetus" பாருங்கள். இங்கே:[2]. அதில் மூன்று வார்ப்புருக்கள் உள்ளன. நான் முதல் வார்ப்புருவைப் பயன்படுத்தினேன். இரண்டாம் வார்ப்புரு தமிழில் இல்லை என்று நினைக்கிறேன். மூன்றாம் வார்ப்புருவில் "Honored" என்பது தமிழில் "ஏற்கும் சபை" என்று வருவது நல்லது. அப்படியென்றால் அவ்வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.

ஒரே வார்ப்புருவில் எல்லாத் தகவல்களையும் கொண்டுவரலாம் என்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்யுங்கள். மேலும், நான் "5ஆம் திருத்தந்தை", "6ஆம் திருத்தந்தை" என்று ஒவ்வொரு திருத்தந்தையின் வரிசை எண்ணையும் நேற்று சேர்த்தேன். இது இத்தாலிய விக்கியிலிருந்து எடுத்தேன். ஆனால் அங்கே ஒரு நிறப்பட்டை போட்டிருக்கிறார்கள். தமிழிலும் அவ்வாறு செய்தால் இன்னும் எடுப்பாக இருக்கும். ஆனால் கட்டாயம் வேண்டும் என்றில்லை.

இது பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். நன்றி!--பவுல்-Paul 17:09, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஐயா,
  • நீங்கள் கேட்டதை திரு.சோடாபாட்டில் செய்துவிட்டார் என நினைக்கின்றேன்.
  • ஆங்கில விக்கியில் இரண்டாம் வார்புரு (Papal styles) தமிழில் எவ்வாறு வரும் என்பது எனக்கு தெரியவில்லை. ஆயர்களை 'மேதகு' அல்லது 'ஆண்டகை' என அழைப்பதைக் கேட்டிருக்கின்றேன், ஆனால் கர்தினால்களுக்கும், திருத்தந்தையருக்கும் மாறும் எனில் அவ்வாற்புருவையும் உருவாக்கலாம்.
  • இத்தாலிய விக்கியில் அவர்கள் திருத்தந்தையர்களுக்கு மட்டுமே தனியாக வர்புரு பயன்படுத்திகின்றார்கள். ஆனால் திமிழிலும், ஆங்கில விக்கியிலும் ஆயர், கர்தினால்கள் மற்றும் திருத்தந்தையருக்கு ஒரே வார்ப்புரு பயன்படுத்துகின்றோம். (நபர்கள் பதவி மாறும் போது எளிதாக இருக்கும்; பதவிக்கு ஏற்றார்போல நிறமும் மாறும்). மேலும் இத்தாலிய விக்கியில் இருப்பது போல் மாற்ற வேண்டாம், எனெனில் பெயர் எடுப்பாகவும், பதவி பின்புறம் இருப்பதே அழகாக இருகின்றது எனறே என்னுகின்றேன்.
  • தயவு செய்து உரோமன் கத்தோலிக்க திருச்சபை கட்டுரையின் பெயர் மாற்றம் குறித்த உங்களின் கருத்துக்களை அதன் பேச்சு பக்கத்தில் இட வேண்டுகின்றேன். நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:01, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
  • வார்ப்புருக்கள் குறித்து நீங்கள் கூறியவை பொருத்தமாக உள்ளன. "Papal styles" வார்ப்புரு தமிழில் தேவையில்லை. இத்தாலிய வார்ப்புருபோல தனி வார்ப்புருவும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். எனவே, "ஏற்கும் சபை" என்னும் ஒரே மாற்றத்தோடு நிறுத்திக்கொள்ளலாம். "கத்தோலிக்க திருச்சபை" தலைப்புப் பற்றி என் பரிந்துரையை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடுகை செய்துவிட்டேன். நன்றி!--பவுல்-Paul 21:50, 26 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]