பேச்சு:அதியமான் நெடுமிடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் பயனர்:TNSE arunbharathi DGL ஆல் சேர்க்கப்பட்ட பகுதிகள் பின்வரும் காரணத்தால் நீக்கப்படுகின்றன.--Booradleyp1 (பேச்சு) 15:09, 2 செப்டம்பர் 2017 (UTC)

\\பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். பசும்பூண் பாண்டியன், கொங்கு நாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவர்களில் முக்கியமானவன், தகடூரை யரசாண்ட அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த நெடுமிடல் அஞ்சி என்பவன். பாண்டியனுக்குக் கீழடங்கிய நெடுமிடல் அஞ்சி அப்பாண்டியனுடைய சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை வென்று கைப்பற்றிக் கொண்டதை, வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ... ... கொங்கு நாட்டுச் சிற்றரசர்களில் முதன்மையானவர் தகடூர் அரசரான அஞ்சியரசர்கள். அவ்வரச பரம்பரையில் வந்த நெடுமிடல் அஞ்சி, பசும்பூண் பாண்டியனுக்குக் கீழடங்கியதோடு அப் பாண்டிய னுடைய சேனாதிபதியாகவும் அமைந்துவிட்டது கண்டு கொங்கு நாட்டார் அவனை வெறுத்தார்கள். அக்காலத்தில் சேர நாட்டு மன்னர் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு அமையாமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சங்க காலத்திலே கொங்கு நாட்டைச் சிற்றரசர் பலர் ஆட்சி செய்திருந்தார் களே தவிர முடியுடைய பேரரசர் ஒருவரும் ஆட்சி செய்ய வில்லை. ஆகவே, சேர, சோழ, பாண்டிய அரசர் அச்சிற்றரசர்களை எளிதில் வென்று கொங்கு நாட்டைச் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். கொங்கு நாட்டைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே, அது காரணமாகச் சேர அரசர், பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான். அவ்வாறு நடந்த சில போர்களில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்

     பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து

(பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11) என்றும் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் (அகம் 266: 12.) என்றும் கூறுவது காண்க. பாண்டியனின் துளு நாட்டுப் போர் துளு நாட்டு நன்ன அரசர் தங்கள் நாட்டுக்கு அருகில் இருந்த வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் பெற முயன்றார்கள் என்று கூறினோம். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் பகைவராயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அவனுடைய சேனைத் தலைவனான அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்கருகில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். இதை கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14) என்று அகப்பாட்டுக் கூறுகிறது. அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் இறந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது\\

\\நெடுமிடல் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் இருவர் காணப்படுகின்றனர். 1. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தனால் வீழ்த்தப்பட்டவன். 2. அரிமளம் ஊரை அடுத்திருந்த நாட்டை ஆண்டவன். சோழ பாண்டியர் கூட்டு முயற்சியால் வீழ்த்தப்பவன். • நெடுமிடல் என்னும் அரசன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனால் வீழ்த்தப்பட்டன். [1] • எவ்வி ஏவலின்படி பகைவர் செடுமிடலை வீழ்த்தினர். வீழ்த்தியவர் அரிமணவாயில் உறத்தூர் என்னுமிடத்தில் உண்டாடி மகிழ்ந்தனர். இவனை வீழ்த்தியவர் பெயர் பசும்பூண் எனக் குறிப்பிடப்படுவதால் பசும்பூண் கிள்ளிவளவன் என்னும் சோழ வேந்தனாகவோ, பசும்பூண் பாண்டியன், பசும்பூண் செழியன் என்னும் பாண்டிய வேந்தர்களில் ஒருவனாகவோ இருத்தல் வேண்டும். அல்லது சோழர், பாண்டியர் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்தும் வீழ்த்தியிருக்கலாம். [2]\\

  • இப்பகுதி நெடுமிடல் கட்டுரையின் உள்ளடக்கத்தை அப்படியே கொண்டுள்ளதால் இதுவும் நீக்கப்படுகிறது.


@Kanags and Nan: பயனர்:TNSE arunbharathi DGL, பதிப்புரிமை மீறலாக இணைத்த தகவல்களை நீக்கிவிட்டு, பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டேன். ஆனால் அவர் மீண்டும் அவற்றை இணைத்து, மேலும் சில பகுதிகளையும் இணைத்துள்ளார். அவையும் பதிப்புரிமை மீறலா என்று தெரியவில்லை; தேடிப்பார்க்க வேண்டும். அவர் பேச்சுப் பக்கத்திலும் வேண்டுகோளைப் பதிவு செய்துள்ளேன். அவர் மேற்கொண்டு இதே தவறைத் தொடராதிருக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 17:18, 2 செப்டம்பர் 2017 (UTC)