பேச்சு:அண்ணள் அஹ்ரகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த ஊரின் பெயர் அண்ணலக்ரஹாரம் ஆகும்.அண்ணலக்ரஹாரம் ஊராட்சி கட்டுரையை பார்க்கவும்

@Hibayathullah: கட்டுரைகளை நிர்வாகிகள் மட்டுமே இணைக்க/நீக்க முடியும். எனவே இவ்வாறு இருக்கும் கட்டுரைகளுக்கு {{Merge}} வார்ப்புரு இடுவதன்மூலம் நிர்வாகிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லலாம். எ.கா: {{Merge|அண்ணலக்ரஹாரம் ஊராட்சி}} - ʋɐɾɯɳபேச்சு 06:21, 12 ஆகத்து 2017 (UTC)
ஊராட்சி வேறு, ஊராட்சியில் உள்ள கிராமம் வேறு. இரு கட்டுரைகளையும் இணைக்கத் தேவையில்லை. தலைப்பை நகர்த்திவிட்டால் போதுமானது.--Kanags \உரையாடுக 07:01, 12 ஆகத்து 2017 (UTC)
@Kanags, Ravidreams, and Balurbala: இன்றுவரை ஊராட்சி மற்றும் ஊர் பற்றிய எனது குழப்பங்கள் தீர்வில்லை. (எனது முயற்சியை நீண்ட நாட்களுக்கு முன்பே ஒத்திப்போட்டுவிட்டேன் :( ). காண்க பேச்சு:தோவாளை!!. அண்ணள் அஹ்ரகரம் மக்கள் தொகை 2001-இல் 6266, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி மக்கள் தொகை 2011-இல் 8831. பத்து ஆண்டுகளில் கூடுதலாக 2600 மக்கள் என்பது ஏற்கக்கூடியதே எனில் அண்ணலக்ரஹாரம் ஊராட்சியிலுள்ள அண்ணல்அக்ரஹாரம் தவிர்த்த பிற சிற்றூர்களின் (அரியதிடல், மாத்தி, முகுந்தநல்லூர், திருமெய்ஞானம்) மக்கள் தொகை 0 ?. ஆகவே இக்கட்டுரை அண்ணலக்ரஹாரம் ஊராட்சியைப் பற்றியதாகக் கருதினேன். மேலும் அண்ணள் அஹ்ரகரம் என்பது சரியான பலுக்கமாகத் தோன்றவில்லை எனவேதான் இணைக்க வேண்டி வார்ப்புரு இட்டேன். தவறெனில் நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று கூறி என்னை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்!! - ʋɐɾɯɳபேச்சு 08:30, 12 ஆகத்து 2017 (UTC)
ʋɐɾɯɳ, ஓர் ஊரைப் பற்றிய கட்டுரை எழுதலாம். அதே ஊர் ஓர் ஊராட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சியாக இருந்தால் அதைப் பற்றிய தனிக் கட்டுரையும் ஏற்புடையதே. மேலும் அந்த ஊர் ஒரு வட்டமாகவும் இருந்தால் அதைப் பற்றிய தனிக்கட்டுரையும் தேவையே. அக்கடுரைகளில் அதிக அளவு பொதுத்தன்மை இல்லாமல் எழுதப்பட வேண்டும்.--இரா. பாலாபேச்சு 16:29, 12 ஆகத்து 2017 (UTC)