பேச்சு:அண்டவிய மொழிபெயர்ப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிக்கட்டுரையாக இருக்குமளவுக்கு எதுவுமே காணப்படாத சில வரிகள்.--பாஹிம் (பேச்சு) 05:32, 4 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பாகிம், இது கலைக்களஞ்சியத்துக்கு தேவையான ஒரு முக்கியமான கட்டுரை. எனவே குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இங்கு தேவையில்லை. ஆனால், கட்டுரை ஒரு குறுங்கட்டுரை என்பதே இதன் குறைபாடு. உங்களால் முடியுமானால் கட்டுரையில் ஒரு சில முக்கிய குறிப்புகளைச் சேர்க்க முடியுமாவெனப் பாருங்கள். en:Universal translator. மேலும் கட்டுரையை நீக்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 08:20, 4 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது விளங்குகிறது, கனகு. ஆயினும், வெறுமனே மூன்று வரிகளை எழுதி விட்டு அதனை ஒரு புதுக் கட்டுரையாகச் சேர்த்துக் கொள்வது தகாது. அவ்வாறான விடயங்களை அவற்றுடன் தொடர்பான வேறு கட்டுரைகளில் எளிதில் சேர்த்து விடலாம். இத்தலைப்பு தேவையானதேயாயினும் இங்கு வெறுமனே தலைப்புக்கு ஒரு சிறு விளக்கம் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்னும் ஏராளமான கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் காண முடிகிறது. ஒருவர் ஒரு புதிய கட்டுரையை உருவாக்கும் போது அது எந்தளவுக்கு இருக்க வேண்டுமென்று வரையறை எதுவுமின்மையால் இவ்வாறான ஓரிரு வரிகளில் அமையும் கட்டுரைகள் மலிந்து விடுகின்றன. இவ்வாறான கட்டுரைகளைப் புதிதாக எழுத நினைப்போருக்கு இத்தகைய போக்கை, அஃதாவது ஓரிரு வரிகளிலான கட்டுரைகளைக் காணும் போது சோம்பலேற்பட்டு விடுகின்றது. அதனாலேயே இக்கட்டுரையையும் இவ்வாறு குவிந்து கிடக்கும் ஏனைய கட்டுரைகளையும் நீக்க வேண்டும். அவை கட்டுரைகளன்று; வெறுமனே சிறு குறிப்புக்கள்.--பாஹிம் (பேச்சு) 12:12, 4 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை நீக்கினால், இதில் உள்ள சில கலைச்சொற்கள் (தலைப்பு உட்பட) காணாமலேயே போய் விடக்கூடும். எனவே நீக்காமல், இன்னும் சில வரிகளைச் சேர்ப்போம் வாருங்கள்.--Kanags \உரையாடுக 12:32, 4 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]