பேச்சு:அணி (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 
அணி (கணிதம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Sparse matrix என்பதற்கு விலத்தி அணி அல்லது விலவு அணி என்று கூறலாம். அண்மையில், நிகழ்ந்த நெசவு பற்றிய சொற்களைதொடர்ந்து (பார்க்கவும்.) ஆய்ந்தபொழுது. விலத்தி என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழக அகராதி " < விலத்து-. Sparseness, being not close; நெருக்கமின்மை. இந்த ஆடையில் நூலிழை விலத்தியா யிருக்கிறது." என்று பொருள் தருகின்றது- இங்கே கூறுகின்றது. பூக்காரியிடம் என் தாயார் பேசும்பொழுது "என்ன இப்படி விலத்தி விலத்தியா கட்டியிருக்க பூக்கு இவ்வளவு வில கேக்கற?" என்று கேட்டது நினைவுக்கு வந்தது. இப்பொழுது இலங்கையில் விலத்தி என்னும் சொல் பதவி/பொறுப்பு/உறவு இல் இருந்து விலகி இருப்பதற்குப்பயன்படுத்துவது போலத் தெரிகின்றது. நூலிழை விலத்தியாய் இருக்கின்றது என்னும் பயன்பாட்டில் இருந்தும் விலத்தி, விலவு என்றால் விலகி விலாச விலாசமாக இருப்பது பற்றியும், இதனை விலத்தியணி = sparse matrix என்பதற்குப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். விலவணி, விலத்தியணி என்னும் இரு சொற்கள் நல்ல பொருத்தமான சொற்கள். பன்னாடை என்னும் சொல்லும் நெருக்கம் இல்லாமல் இருக்கும் அமைப்பைக் குறிப்பது. இங்கு குறித்து வைப்பது நல்லது.--செல்வா 14:25, 25 மார்ச் 2008 (UTC)

சொல் பற்றிய உரையாடல் பகுப்பு இட்டமைக்கு நன்றி, சிவகுமார். நானும் இட எண்ணியிருந்தேன்.--செல்வா 15:04, 25 மார்ச் 2008 (UTC)
விலத்தி அணி நன்றாக உள்ளது. இலங்கையில் தொடர்புள்ள பொருளுக்குப் பயன்படுவது மேலும் வசதி. எங்கள் ஊரில் பூவைக் கலக்கமாகக் கட்டியிருக்கிறார்கள் என்பர். பன்னாடை மதுரை மாவட்டத்தில் தென்னை மரத்திலுள்ள நெருக்கமற்ற நார்களைக் கொண்டமைந்த பகுதியைக் குறிக்கிறது. எதுவுமே (அறிவு) தங்காதவர் என்ற பொருளில் பன்னாடைப் பயல் என்று வசைச்சொல்லாகவும் பயன்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 16:57, 25 மார்ச் 2008 (UTC)
பன்னாடை என்பது தென்னை மரத்தில் தேங்காய்க் குலைகளுக்குக் கீழே இழைகள் நெருக்கம் அல்லாத பட்டையாக ஏறத்தாழ 3 அடி நீளமும், ஓரடி அகலமும் கொண்டிருக்கும் ஒரு பகுதி. நெருக்கம் இல்லாததாலேயே "பன்னாடை" என்று திட்டுவார்கள். மேலும், டெஹ்ன்னை மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு பகுதி இதுதான். டெஹ்ன்னை, பனை, வாழை போன்ற மரங்களில் ஒவ்வொரு பகுதியும் முற்றிலுமாக வாழ்க்கையில் பயன்படும். --செல்வா 22:17, 25 மார்ச் 2008 (UTC)
ஓ, பன்னாடை வசவின் பின்புலம் நெருக்கமின்மையா? -- சுந்தர் \பேச்சு 07:14, 1 ஏப்ரல் 2008 (UTC)

இலங்கையில் Sparse என்பதற்கு ஐது என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. நெருக்கமாக இல்லாது இருப்பதை ஐதாக இருக்கிறது என்பார்கள். ஐது என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் பதிவு பின்வருமாறு:

ஐது aitu :, n. < ஐம்-மை. 1. That which is beautiful; அழகுள்ளம். பெற்றியு மைதென (மணி. 10, 2). 2. Beauty; அழகு. (கூர்மபு. தக்கனைச்சாத். 3.) 3. That which is minute, fine, subtle; நுண்ணியது. ஐதமர் நுசுப்பினாள் (கலித். 52.) 4. That which is thin, light, slender, soft; மெல்லி யது. ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13). 5. That which is wonderful; வியப்புடையது. (தொல். சொல். 385, உரை.) 6. Fluidity; இளகிய தன்மை. சுண்ணம் . . . நான நீரி னைதுபட் டொழுகி (சீவக. 117). 7. Sparseness, standing near but not in contact; செறிவின்மை. ஐததுநெல், அடர்ந்தது சுற்றம். (J.)

மயூரநாதன் 20:14, 25 மார்ச் 2008 (UTC)


ஐ என்பது அழகு, உயர்வு என்பதை நன்கு அறிவேன். ஐம்மை என்பதும் கேட்டிருக்கின்றேன். ஐது என்பதைக் கேட்டதில்லை. அருமையான சொல்லாட்சி! ஐதணி என்றும் சுருக்கமாகச் சொல்லலாமே! அருமை! விலகு, விலாசம் என்னும் சொற்கள் தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்தில் இருப்பதால் (எல்லா மாவட்டங்களிலும்), விலத்தி என்னும் சொல் தமிழ்நாட்டில் எளிதாகக் புரிந்து கொண்டு வரவேற்க வாய்ப்புண்டு. எனினும் ஐதணி, விலத்தியணி போன்ற கலைச்சொற்களை ஏற்கும் நிலை வரவேண்டும். ஐது = செறிவின்மை என்பது முக்கியமான சொற்களுள் ஒன்று. பல இடங்களில் பயன்படக்கூடிய கருத்துச்சொல்.

--செல்வா 22:17, 25 மார்ச் 2008 (UTC)

ஐதணியை முதன்மைப்படுத்தி விலத்தியணி என்பதை மாற்றுப் பயன்பாடாகத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 05:55, 1 ஏப்ரல் 2008 (UTC)

தாயம்[தொகு]

இலங்கையில் அணிக்குப் பதிலாக தாயம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. பக்கவழிமறு செய்துள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 16:16, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணி_(கணிதம்)&oldid=3860530" இலிருந்து மீள்விக்கப்பட்டது