பேச்சு:அடைக்கலராசு
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடைக்கலராசு என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஒருவரின் சட்டப்பூர்வமான பெயரை, நமது தனித்தமிழ் கொள்கையால் மாற்றம் செய்யக்கூடாது என்பதை முன்மொழிகிறேன். இது நமது விதிகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளதா?--த♥ உழவன் +உரை.. 05:22, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
- அப்படியானால் M. Rajesh என்பதை எவ்வாறு தமிழில் எழுத வேண்டும். மு. இராசேசு என்று உள்ளது. நான் எழுதிய கட்டுரையே, பெயர்களுக்கு தமிழ் விக்கியில் கொள்கை உள்ளதா என்று தெரியவில்லை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:49, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
- அடைக்கலராஜ் என்பதை அடைக்கலராஷ், அடைக்கலராஸ் என்று எழுதுவது தான் பிழை. ஏனெனில் கிரந்த முறையில் ஜ் என்று எழுத இடம் இருக்கிறது. தமிழ் முறையில் ஜ் ஒலி / எழுத்து இல்லை. எனவே, அடைக்கலராசு என்று எழுதுவது தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டது. மொழியின் இலக்கணத்தைச் சட்டம் கட்டுப்படுத்த முடியாது.--இரவி (பேச்சு) 06:24, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
- தனித்தமிழின் மேன்மையைக் குறிப்பிட, இங்கு நான் வரவில்லை. சட்டப்பூர்வமாக அமைந்துள்ள ஒருவரின் பெயரில் எழுத்துமாற்றம் நிகழ்ந்தால், அது அவருக்கு இடரைத்தரும் என்பதனையே முன்மொழிந்தேன். தினேஷ்! நீங்கள் வங்கிகணக்கை உருவாக்கும் போது, தினேஷ் என்று கையொப்பம் இட்டு உருவாக்கியிருந்தால், அதனை தினேசு என்று கையெழுத்து இட்டால் இடர் வரும் அல்லவா? தனித்தமிழில் உருவாக்க வேண்டிய ஆவணங்கள் 1000உண்டு. தலைப்புச்சொற்களை மட்டும் மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. மற்றொன்று தமிழ் எழுத்துக்களைப் போர்த்தியுள்ள, அயல்மொழிச்சொற்களைக்குறித்தும் நீங்கள் தான் நல்லதொரு செயலாக்க வன்திட்டத்தை நிலைநாட்ட வேண்டும் இரவி!த♥ உழவன் +உரை..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடைக்கலராசு&oldid=3964650" இலிருந்து மீள்விக்கப்பட்டது