பேச்சு:அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக்க நன்றி மயூரநாதன். இச்சொற்கள் தொடர்பாக குளப்பத்தில் இருந்தேன். உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாகவும், திறனாகவும் இருக்கின்றது. குறளடி தனியே கொண்ட பாடல்கள் சில பகிர்வீர்களா? திருக்குறள் குறளடியை பின்பற்றவில்லைதானே? --Natkeeran 22:14, 17 ஜனவரி 2006 (UTC)


நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்தும், சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட சில குறளடிகளால் அமைந்த பாடல்களக் கீழே காண்க.

திருவாய்மொழி

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே
தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே
அமரர்க்கு அரியானை
தமர்க்கு எளியானை
அமரத் தொழுவார்க்கு
அமரா வினைகளே

மனோன்மணீயம்

(குறளடி வஞ்சிப்பா)

நந்தாய்தமர் நங்காதலர்
நஞ்சேய்பிறர் நந்தாவரை
நந்தேயமேல் வந்தேனி
நொந்தாழ்துயர் தந்தேஇவண்
நிந்தாநெறி நின்றாரிவர்
தந்தாவளி சிந்தாவிழ,
அடிப்போமடல் கெடுப்போமுகத்
திடிப்போங்குட லெடுப்போமிடுப்
பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி
பொடிப்போம்வசை துடைப்போமுயிர்
குடிப்போம்வழி தடுப்போம்பழி
முடிப்போமினி நடப்போம்நொடி.

Mayooranathan 08:13, 19 ஜனவரி 2006 (UTC)

சரியா[தொகு]

   குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
   சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
   அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
   நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
   கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
   இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
   கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.

என்று எழுதியுள்ளீர்கள்.

ஆனால்

குறளடி - இரண்டு அடிகளைக் கொண்டது.

   சிந்தடி - மூன்று அடிகளைக் கொண்டது.
   அளவடி - நான்கு அடிகளைக் கொண்டது.
   நெடிலடி - ஐந்து அடிகளைக் கொண்டது
   கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு அடிகளைக் கொண்டது.
   இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து அடிகளைக் கொண்டது.
   கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் அடிகளைக் கொண்டது.

என்று இரு்க்வேண்டும் எண்ணுகின்றேன் . சரியா?

அன்பன்: ந.மோகனசுந்தரம்.