பேச்சு:அடி (அளவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணல் தொட்டி என்றால் என்ன? இந்தச் சொற்றொடரின் வேர் என்ன? ஏன் ஆங்கிலச் சொற்களைப் புரட்டிப் போட்டு இப்படி தமிழைக் கொலை செய்கிறீர்கள்? தொகு என்பதற்கு compile எனப் பொருள் கொள்ளலாம். உங்கள் தமிழ் விக்கிபீடியாவினால் யாருக்கும் பயனில்லை.−முன்நிற்கும் கருத்து 59.92.34.141 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மணல்தொட்டி என்பது sandbox என்பதின் நேரடி மொழிபெய்ர்ப்பாகத் தோன்றினாலும் முற்காலத்தில் தமிழ் மாணவர்கள் மணலில் எழுதிப் பழகியதை கருத்தில் கொண்டால் ஏற்புடைய மொழிபெயர்ப்பாகவே தோன்றுகிறது. விக்கிபீடியாவில் உள்ள எந்த கலைச்சொல்லும் தொடர்ந்து மேம்பாட்டிற்கு உரியதே. Wikipedia பேச்சு:கலைச் சொல் கையேடு பக்கத்தில் இது குறித்து மேலும் உரையாடலாம்.--ரவி 14:34, 11 மார்ச் 2006 (UTC)

என்னுடைய சிறு வயதில், யாழ்ப்பாணத்தில், தமிழ் அரிச்சுவடி எழுதப் பழகியது மணல் தொட்டியில்தான். இதுபற்றிக் கருத்துக்கூறிய பயனர் மிக இளவயதினராக இருக்கக்கூடும் அதனால்தான் அவர் இது பற்றி அறியாமல் தமிழ்ச் சொற்றொடருக்கு வேர் கேட்கவேண்டியிருக்கிறது. தொகு என்ற சொல் விக்கிபீடியாவில் மட்டும் பயன்படும் ஒரு சொல்லல்ல. பெரும்பாலான கணினிக் கலைச் சொற்தொகுதிகளில் edit என்பதற்கான தமிழ்ச்சொல்லாகக் கொடுக்கப்பட்டிருப்பது இதுதான். விக்கிபீடியா என்பது ஆர்வமுள்ள எவரும் பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு கலைக்களஞ்சியத் திட்டம். தற்போதைய பங்களிப்புக்கள் உங்களுக்குத் திருப்தி இல்லையானால் நீங்களும் பங்குபற்றி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதுதான் சரியான வழி. Mayooranathan 16:49, 11 மார்ச் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடி_(அளவை)&oldid=1607873" இருந்து மீள்விக்கப்பட்டது