உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அசோகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
அசோகர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அசோகர் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அசோகர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அசோகர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அசோகர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பெயர்[தொகு]

பயனர்:Jayarathina அசோகனை அவர் மொழியில் அசோகா என்று தான் கூப்பிடுவார்கள். அது என்ன வட இந்தியன்னா மட்டும் அசோகர்....... தமிழ் வேந்தன்னா மட்டும் பாண்டியன், சோழன், சேரன். வட இந்தியனுக்கு வடிஞ்சா குருதி. தமிழனுக்கு வடிஞ்சா புழுதியா? எந்த ஊரு நியாயமப்பா இது?

அசோகன் பக்கத்தை பக்கவ்ழி நெறிப்படுத்தினால் வேலை முடிந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:43, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பாண்டியன், சேரன், சோழன் என்பது ஒருமை, சோழர் என்பது பன்மை. அசோகர் என்பது இங்கே பன்மை அல்ல, ஒருமை. அசோகர்க்கு பின்னர், அவரது பெயரைக்கொண்டு மன்னர்கள் வந்து இருந்தால், அங்கே பன்மை வரும். இது என்னவோ நேரம் படத்தில் தம்பி ராமையா , சரவணன் எனும் தன் பெயரை சரவணர் என்று கூறுவது போலவா இருக்கிறது. :D -Vatsan34 (பேச்சு) 15:31, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]
தென்காசி சுப்பிரமணியன், வட இந்தியராயினும், தென் இந்தியராயினும், சிறப்புரு மாந்தர் பெயர்களுக்கு, விகுதியிடும் தேவை ஏற்படின், உயர்வுப்பன்மை விகுதியிட்டு ("அர்") மதிப்புடன் அழைப்பதே நம் பண்பாடு. இவரின் இயற்பெயரான அசோகா விளியாக கருதப்படாதிருக்கவே இதற்கு விகுதி தேவைப்படுகின்றது. அதற்காக இவரை அன் விகுதியிட்டு மதிப்பில்லாமல் அழைப்பது சரியாகாது. இத்தகைய விகுதி தமிழ் மன்னர்களின் பெயர்களில் (விளியாக அமையாததால்) தேவைப்படாததாலும், இலக்கியத்தில் இப்பெயர்களின் பயன்பாட்டினைக் கருத்திற்கொண்டும் மரபுப்படி அவர்களின் பெயர்களுக்கு விகுதி சேர்க்கப்படுவதில்லை. (விக்கிப்பீடியாவில் பெயர்களின் பொது பயன்பாடு மற்றும் அறியத்தகு நிலை ஆகியவற்றை தவிர பிற விகுதிகள் பெயர்களோடு சேர்கப்படுவதில்லை; எ.கா: Sir, Chevalier etc., ) எனினும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஔவையார், கம்பர், திருவள்ளுவர், நக்கீரர் முதலிய நம்மவர்களின் பெயர்களும் உயர்வுப்பன்மை விகுதியிட்டு கையாளப்பட்டிருப்பதைக் காண்க. (குலப்பெயர்களில் பன்மையினைக்குறிக்க சேரர், சோழர் பாண்டியர்). உங்களுக்கு இது நெருடலாக இருப்பின், பிறருக்கு எத்தடையும் இல்லையெனில், தமிழ் வேந்தர்களின் பெயர்களுக்கு உயர்வுப்பன்மை விகுதியிடுக (எ.கா: சோழனார் நல்லுருத்திரனார்; முதலாம் இராஜராஜ சோழனார்), அதை விடுத்து பிற வேந்தர்களின் பெயர்களை மரபுக்கு எதிராக மாற்றுவது முறையாகாது. அசோகன் என்பது முற்றிலும் வேறு ஒரு நபருடைய பெயர். தமிழ் மன்னர்களைப்போலவே இப்பெயரின் இயல்பிலேயே அன் விகுதி கொண்டமைந்துள்ளதை நோக்குக. இப்பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. மற்றுமோர் கட்டுரை எழுதப்படின் பக்க வழிமாற்று உருவாக்கலாம்.
(பி.கு: நீங்கள் ஒரு கட்டுரையினை பக்க வழிமாற்றின்றி நகர்த்தும் போது அப்பக்கத்திற்கு உள்ள பிற வழிமாற்றுகளையும் சரி செய்ய மறவாதீர். இதனால் முறிந்த வழிமாற்றிகள் உருவாவதை தவிர்க்கலாம்) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:10, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

முறிந்த வழிமாற்றி பற்றிய உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

ஆனால் புலவரையும், மன்னையும் நீங்கள் குழப்பாதீர்கள். தேவை ஏற்ப்படின் என்றால் எப்போது தேவை? ஆர் விகுதி புலவருக்குத் தேவை. அன் விகுதி அரசனுக்குத் தேவை. ஆரிய அரசன் பிரகதத்தன் என்று தான் எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். அதனால் அசோகனை தமிழ்ப் பண்பாட்டின் படிக் கூப்பிட்டாலும் அசோகன் என்றுதான் வரும். அதே போல் தான் ரிஷிகள் என்றால் ஆர் விகுதியும் சேர்க்கிறார்கள்.

எல்லோருக்கும் ஒரே விதி தான். வேண்டுமானால் அசோகன் (அரசன்) என்னும் தலைப்புக்கு நகர்த்தி வழிமாற்றிகளை அதற்கு ஏற்ப வையுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:14, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

 • //தேவை ஏற்படின் என்றால் எப்போது தேவை?// அசோகா விளியாக கருதப்படாதிருக்கவே இங்கு விகுதி தேவைப்படுகின்றது. இது தான் விதி. பிரகதத்தன் என்னும் பெயர் அன் என முடிவது விகுதி அல்ல (அக்பர் -> அக்பன் என்று மாற்றுவீரா? இல்லை எனில் ஏன்?).
 • //ஆர் விகுதி புலவருக்குத் தேவை. அன் விகுதி அரசனுக்குத் தேவை.// இந்த விதியை வகுத்தது யார்? ஏன் புலவர்களுக்கும் முனிவர்களூக்கும் மட்டும் "ஆர்"? கொடும் செயல் புரிந்தவர்களையும் கூட "அவர்"/"இவர்" என்றே தமிழ் விக்கியில் அழைக்கின்றோம். அதையே பெயரிலும் பின்பற்றுவது நல்லது.
 • அசோகன் என்னும் பெயருக்கான தேடல் முடிவுகளில் ஒன்று கூட அரசரைக்குறிக்கவில்லை. அப்படி இருக்க பொது வழக்கில் அறியத்தகு நிலையின்படியும் இவர் அசோகர் என்று தான் அரியப்படுகின்றார். அசோகர் என்று தான் அரசு பாட புத்தகங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • அரசர் என அழைப்பதில் என்ன குறை? அரசர் தமிழ் சொல் தானே?
 • இதை மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் தமிழ் விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி, பிறருக்கும் எச்சிக்கலும் இல்லை எனில் மாற்றிக்கோள்ளுங்கள். ஆலமரத்தடியில் இப்பக்கத்திற்கு இணைப்பிட்டு கேட்டுப்பார்க்கவும். இங்கு எடுக்கப்படும் முடிவு நடைக்கையேட்டிலும்/பெயரிடல் மரபிலும் பதிவு செய்யப்பட வேண்டும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:00, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

”அவனை அவர் பாடியது” என்பது நம் தமிழ் மரபு. சேரர், சோழர், பாண்டியர் என்பது உயர்வுப் பெயர் மட்டுமன்றிப் பன்மைப் பெயருமாம். சேரர் என்பது சேரர்கள் எனப் பொருள் மயக்கத்தைத் தரலாம். அசோகன் என்ற தலைப்பை முன்னிலைப்படுத்துவதில் மாதரசன் போலவே எனக்கும் உடன்பாடே. தென்காசி சுப்பிரமணி, “வட இந்தியனுக்கு வடிஞ்சா குருதி. தமிழனுக்கு வடிஞ்சா புழுதியா?” என்று தாங்கள் உணர்ச்சி வயப்படும் அளவுக்கு இங்கு எதுவும் நடந்து விடவில்லை என நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:25, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

//அசோகன் என்ற தலைப்பை முன்னிலைப்படுத்துவதில் மாதரசன் போலவே எனக்கும் உடன்பாடே.// கார்த்திகேயன், மன்னிக்கவும், இதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் தான் இவ்வளவு சிக்கலும் எழுந்தது. (நீங்கள் நீங்கள் குறிக்க நினைத்தது திரு. தென்காசி சுப்பிரமணியன் என நினைக்கின்றேன்) ”அவனை அவர் பாடியது” என்பது கற்றோர் வேந்தரினும் உயர்ந்தவர் என்பதால் எழுந்த வழக்கு. நாம் அனைவரையும் உயர்வாகவே குறிக்கலாமே? கட்டுரை எழுதும் போது அவன் செய்தான், இவன் போசினான் என்று குறிப்பது தற்கால வழக்கில் சரியாகப்படவில்லை. இதே விதி தலைப்புக்கும் பொருந்தும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:07, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

// தாங்கள் உணர்ச்சி வயப்படும் அளவுக்கு //

பயனர்:Karthi.dr நான் உணர்ச்சி வசமே படவில்லையே? மாதரசன் சொல்றார் அனைவருக்கும் மரியாதை கொடுக்கலாம்னு. அப்பன்னா எல்லாத்துலயும் போய் மாத்தனுமே. இது மட்டும் அப்படியே இருந்ததுன்னா எப்படி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:56, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பாபர் அக்பரின் பெயரே அப்படித்தான் வரும். அலெக்சாந்தரை அலெக்சாந்தர் என்றுதான் எழுத முடியும். அலெக்சாந்திரன் என்று எழுதுங்கள் என்றா சொன்னேன். அசோகா என்னும் அரசனை அசோகன் என்று எழுதுவது தான் மரபு. அதற்கு ஆரிய அரசன் பிரகதத்தன் என்பதே எடுத்துக்காட்டு. தத்தன் என்ர பெயரை வட்க்கில் தத்தா என்றுதான் சொல்வார்கள்.

அர் விகுதியில் இயல்பாக முடியும் பெயரை எடுத்துக்காட்டி மீண்டும் குழப்ப வேண்டாம். ஆ விகுதியில் முடியும் அரசனைக் காட்டுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:02, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும் மாதரசன். தவறான கருத்தை அடித்திருக்கிறேன். தென்காசி சுப்பிரமணி, பெயரிடல் மரபு முறைப்படிப் பிற பயனர்கள் கருத்தறிந்த பின்னர் பெயரை மாற்றலாம். சாணக்கியர், பிந்துசாரர் போன்ற பல கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். மாதரசன், தலைப்பை மாற்றியே தான் தீர வேண்டும் என்ற முடிந்த முடிபு என் நிலையன்று. மாற்ற வேண்டியது அவசியமாகப்படவில்லை. பிற பயனர்கள் மாற்ற விரும்பி மாற்றினாலும் பிரச்சினை இல்லை என்பதே என் நிலை.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:06, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சாணக்கியருக்கு அர் விகுதி சரிதான். ஆனால் பிந்துசாரன் என்று தான் எழுத வேண்டும். பிந்துசாரர் என எழுதியது தவறே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:09, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பண்பாடு?[தொகு]

// உயர்வுப்பன்மை விகுதியிட்டு ("அர்") மதிப்புடன் அழைப்பதே நம் பண்பாடு //

ஜெயரத்தினா உங்கள் எண்ணமே தவறு. அன் விகுதி வந்தால் மரியாதை இல்லை என்கிறீர்களா? சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை இந்த தமிழரின் ஐந்திணை கடவுளிலும் அர் விகுதி வரவில்லையே. அப்படின்னா அப்படி பேர் வச்சவங்க மரியாதை கெட்டவங்களா. அரசனும் இறைவனும் ஒன்னு என்று நினைத்து வைப்பது தான் இதெல்லாம். நேரே பாக்கும் தான் அரசனுக்கு மரியாதை தர வேண்டும். அதாவது நீங்கள் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியை நேரே பார்த்தால் அரசர் வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அரசன் வருகிறான் என்று சொன்னால் உங்களுக்கு மிளகாய் பொடி தண்டனை தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:25, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

//அன் விகுதி வந்தால் மரியாதை இல்லை என்கிறீர்களா?//
 • இதை //இந்தியனுக்கு வடிஞ்சா குருதி. தமிழனுக்கு வடிஞ்சா புழுதியா?// இதேடு சேர்த்துப்பார்க்கும் போது அன் விகுதி வந்தால் மரியாதை இல்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனெனில் "அன்" விகுதியிட்டதால் தானே புழுதி வடிகின்றது என்று கூறி நம்மவரின் குருதியை புழுதியோடு ஒப்பிட்டீர்கள்?
 • அர் விகுதியை உயர்வுப்பன்மை எனத்தமிழ் இலக்கணம் கூறுகின்றது, அப்படியெனில், இது எதிலிருந்து உயர்ந்தது என கேட்கத்தோன்றுகின்றது.
 • இதனால் என் எண்ணம் தவறு என்பதற்கு போதிய காரணம் இல்லை.
//தமிழரின் ஐந்திணை கடவுளிலும் அர் விகுதி வரவில்லையே அப்படி பேர் வச்சவங்க மரியாதை கெட்டவங்களா.//
 • பாபர் மற்றும் அக்பரின் இருதியில் வருவம் "அர்" விகுதி இல்லை, அதே போல ஐந்திணை கடவுளிள் பெயர்களுக்கு இறுதியில் வருவதும் விகுதி இல்லை. (அக்பரை எடுத்துக்காட்டியது இதற்கு தான் உங்களை குழப்ப அல்ல)
 • இத்தெய்வங்களுக்கு பெயர் வைத்தவரின் மரியாதைத்தன்மை குறித்து யான் அறியேன். ஆயினும் சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய பெயர்கள் பகுபடா பெயர் சொற்கள். இவற்றின் இறுதியில் வருவது விகுதி இல்லை. இதைத்தான் முதலில் இருந்தே கூறிக்கொன்டிருக்கின்றேன்.
//நேரே பாக்கும் தான் அரசனுக்கு மரியாதை தர வேண்டும்//
 • அது தான் தமிழ் விக்கியில் வேண்டாம் என்கின்றேன்.
ஏன் கவிஞரல்லாத சாணக்கியருக்கு மட்டும் விதி விலக்கு?
அரசர் என அழைப்பதில் என்ன குறை? அதுவும் தமிழ் தானே? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:33, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

//இந்தியனுக்கு வடிஞ்சா குருதி. தமிழனுக்கு வடிஞ்சா புழுதியா//

ஏற்கனவே முன்னே பலபேர் சொன்ன மாதிரியே சொல்லாம கொஞ்சம் வித்யாசமாச் சொல்லலாம்னு சொன்னேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:05, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அசோகர்&oldid=3815525" இலிருந்து மீள்விக்கப்பட்டது