பேசில் ட'ஒலிவேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேசில் ட'ஒலிவேரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பேசில் லெவிஸ் 'ஒலிவேரா
பட்டப்பெயர்டோல்லி, பாஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பங்குபல்துறை வல்லுனர், பயிற்சியாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 432)16 சூன் 1966 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு10 ஆகத்து 1972 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)5 சனவரி 1971 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 ஆகத்து 1972 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1960–1963மிடில்டன்
1964–1980வொர்செஸ்டையர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து முதல்தர ப.அ
ஆட்டங்கள் 44 4 367 187
ஓட்டங்கள் 2484 30 19490 3770
மட்டையாட்ட சராசரி 40.06 10.00 40.26 24.96
100கள்/50கள் 5/15 0/0 45/101 2/19
அதியுயர் ஓட்டம் 158 17 227 102
வீசிய பந்துகள் 5706 204 41079 7892
வீழ்த்தல்கள் 47 3 551 190
பந்துவீச்சு சராசரி 39.55 46.66 27.45 23.56
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 17 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/46 1/19 6/29 5/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 1/– 215/– 44/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 10 ஏப்ரல் 2008

பேசில் லெவிஸ் ட'ஒலிவேரா (Basil Lewis D'Oliveira, பிரித்தானிய அரசின் ஒழுங்குத் தளபதி விருது பெற்றவர், நான்கு அக்டோபர் 1931 – 19 நவம்பர் 2011),[1] உலகெங்கும் அன்புடன் "டோல்லி" என்று அழைக்கப்படுபவர்,[2] தென்னாப்பிரிக்காவில் பிறந்த துடுப்பாட்டாளர் ஆவார். தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் அரசில் டோலிவேரா கலப்பினத்தவராக வகைப்படுத்தப்பட்டு and hence barred from முதல்தர துடுப்பாட்டத்தில் விளையாடத் தடை செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் தேசிய வெள்ளையரல்லாதவர் துடுப்பாட்ட அணித்தலைவராகவும் வெள்ளையரல்லோதோர் கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.[3] பின்னர் இங்கிலாந்து வந்தடைந்து அந்நாட்டின் அணியில் டோலிவேரா 44 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் நான்கு ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் ஆடியுள்ளார். மிகச்சிறந்த துடுப்பாட்டாளராக விளங்கியபோதும் 1968ஆம் ஆண்டில் டோலிவேரா இங்கிலாந்து அணியின் அங்கமாக தென்னாப்பிரிக்கா செல்ல தெரிவானது தொடர்பான "டோலிவேரா விவகாரம்" மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.

டோலிவேரா விவகாரம்[தொகு]

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் சட்டப்படி வெள்ளையரல்லாதோர் (கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் மற்றும் இந்தியர்) தென்னாப்பிரிக்காவின் தேசியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெறத் தகுதி இல்லாதவர். தென்னாப்பிரிக்காவில் விளையாட வரும் வெளிநாட்டு அணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்துவனவாக இருந்தன.[4] 1968-69 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியினர் தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் தொடர் விளையாட செல்வதாக இருந்தது.

1968ஆம் ஆண்டில் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த ஆத்திரேலியாவிற்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் டோலிவேரா விளையாடினார்.ஆனால் அடுத்த மூன்று தேர்வுகளுக்கு தெரிவாக வில்லை. இருப்பினும் இறுதித் தேர்வு ஓவலில் நடந்தபோது அணியில் சேர்க்கப்பட்டு முதல் ஆட்டத்தில் 158 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தினால் அந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்லவிருந்த அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.[1] இருப்பினும் வெளிநாடு செல்லவிருந்த அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. டோலிவேரா சேர்க்கப்பட்டால் சுற்றுலா இரத்தாகலாம் என்பதால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட அதிகாரிகள் இங்கிலாந்தின் எம்சிசி கழகத்தில் அழுத்தம் கொடுத்து டோல்லியை நீக்கியதாக இனவொதுக்கல் எதிர்ப்பாளர்கள் கருதினர். பரவலான ஊடக விவாதங்களுக்கிடையில் வார்விக்சையரின் டொம் கார்ட்ரைட் காயங்கள் காரணமாக விலக அவருக்கு மாற்றாக டோலிவேரா இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.[1] தென்னாபிரிக்காவின் பிரதம அமைச்சர் பி. ஜெ. வொர்ஸ்டர் டோலி அணியில் இருந்தால் துடுப்பாட்டத்தொடரை அனுமதிக்க இலாது என திட்டவட்டமாக கூறினார். "இது எம்சிசி துடுப்பாட்ட அணி இல்லை, இனவொதுக்கல் எதிர்ப்பாளர்களின் அணி" என முழங்கினார்.[5] இதன் பின்னர் ஒரு வாரத்தில் இங்கிலாந்து தனதுத் தொடரை இரத்து செய்தது.[5] இந்த நிகழ்வு துடுப்பாட்ட விளையாட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[6] இந்த ஆட்டங்கள் இரத்தானநிலையில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவிற்குச் சென்றது. ஆனால் 1970இல் இங்கிலாந்தில் ஆடவிருந்தத் தொடர், 1971-72இல் ஆத்திரேலியாவில் ஆடவிருந்தத் தொடர் இரண்டும் இனவொதுக்கல் எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புகளுக்கிடையே இரத்து செய்யப்பட்டன.[7]

டோலிவேரா விவகாரம் பன்னாட்டுத் துடுப்பாட்ட விளையாட்டுக்களிலிருந்து தென்னாப்பிரிக்காவை விலக்கி வைக்கக் காரணமாக அமைந்தது.[8]

இறப்பு[தொகு]

முதிய காலத்தில் டோலிவேரா பார்க்கின்சன் நோயினால் துன்புற்றார்.[9] தனது எண்பதாவது அகவையில் , இங்கிலாந்தில், நவம்பர் 19, 2011.. அன்று இயற்கை எய்தினார்.[10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Bateman, Colin (1993). If The Cap Fits. Tony Williams Publications. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-869833-21-X. https://archive.org/details/ifcapfits0000unse. 
 2. Basil D'Oliveira dies aged 80
 3. Thicknesse, John. "Player Profile: Basil D'Oliveira". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 2009-06-11.
 4. Minty, Abdul (1971-04). International Boycott of Apartheid Sport. United Nations Unit on Apartheid. 
 5. 5.0 5.1 Williamson, Martin (2008-09-13). "The D'Oliveira Affair". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05.
 6. Jon Gemmell (2004). The Politics of South African Cricket. Routledge (UK). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0714653462. http://books.google.com/books?visbn=0714653462&id=CTIZdi9DjBQC&pg=PA146&lpg=PA146&dq=%22Basil+D%27Oliveira%22&ie=ISO-8859-1&output=html. 
 7. Williamson, Martin (2006-08-26). "Cricket in crisis". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05.
 8. Murray, Bruce K (2002-05-01). "The Sports Boycott and Cricket: The Cancellation of the 1970 South African Tour of England". South African Historical Journal 46 (1): 219–249. http://wiserweb.wits.ac.za/PDF%20Files/wirs%20-%20murray.PDF. பார்த்த நாள்: 2011-11-19. 
 9. "Naomi's Story". Archived from the original on 6 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. "England news: Basil D'Oliveira dies aged 80 | England Cricket News". ESPN கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
 11. "Basil d'Oliveira dies: Sport: Cricket". Sport24.co.za. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
 12. "England legend D'Oliveira dies". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசில்_ட%27ஒலிவேரா&oldid=3582034" இலிருந்து மீள்விக்கப்பட்டது