பேசில் ஜோசப்
பேசில் ஜோசப் | |
---|---|
![]() ஒரு நிகழ்ச்சியில் பேசில் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1990 சுல்தான் பத்தேரி, வயநாடு, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2013 –தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் சாமுவேல் (தி. 2017) |
பேசில் ஜோசப் (Basil Joseph) (பிறப்பு: 28 ஏப்ரல் 1990), ஒரு மலையாளத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளரும் நடிகரும் ஆவார்.[1]
தொழில்
[தொகு]பேசில், 2012 இல் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்த காலத்தில் சிஇடி லைப் என்ற குறும்படத்தில் ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] திருவனந்தபுரத்தில் உள்ள இன்ஃபோசிஸில் பணிபுரிந்த போது ஒரு துண்டு படம், பிரியம்வத கதராயனோ ஆகிய குறும்படங்களையும் இவர் எழுதி இயக்கியுள்ளார்[3].
பேசில் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வினீத் சீனிவாசனின் மூன்றாவது இயக்கமான திர என்ற படத்தில் அவருக்கு உதவி இயக்குநராக இருந்தார். மலையாளத் திரைப்பட சகோதரர்கள் வினீத் சீனிவாசன் , தயான் சீனிவாசன் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்த குஞ்சிராமயாணம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் 2015 மலையாளத் திரைப்பட ஓணம் வெளியீடுகளில் திரையரங்க வசூலில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. பேசில் ஜோசப்பின் இரண்டாவது இயக்க முயற்சியான கோதா மற்போரை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டு நகைச்சுவைத் திரைப்படமாகும். இவரது மின்னல் முரளி என்ற மூன்றாவது படத்தில் டோவினோ தாமசு மீநாயகச் சக்திகளைக் கொண்டவராக நடித்தார். இத்திரைப்படம் 2021 இல் நெற்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது மற்றும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.[4]
இவர் 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான அப் & டவுன்: முகலில் ஓராளுண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.
இல்வாழ்க்கை
[தொகு]17 ஆகஸ்ட் 2017 அன்று, பேசில் எலிசபெத் சாமுவேல் என்பவரை மணந்தார்.[5] திருமணத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அவருடன் பழகி வந்தார்.[6][7]
திரைப்படங்களின் பட்டியல்
[தொகு]![]() |
இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
இயக்குநராக
[தொகு]ஆண்டு | தலைப்பு | எழுத்தாளர். | குறிப்புகள் | Ref. |
---|---|---|---|---|
2015 | குஞ்சிராமாயணம் | தீபு பிரதீப் | அறிமுகப் படம் | [8] |
2017 | கோதா | ராகேஷ் மன்டோடி | [9] | |
2021 | மின்னல் முரளி | அருண் அனிருதன், ஜஸ்டின் மேத்யூ | நெட்ஃபிளிக்ஸ் திரைப்படம் | [10] |
உதவி இயக்குனராக
[தொகு]- திர (2013)[சான்று தேவை]
நடிகராக
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் | Ref. |
---|---|---|---|---|
2013 | Up and Down: முகலில் ஓராளுண்டு | லிப்ட் சரி செய்பவர் | ||
சைலன்ஸ் | ஜான் | |||
2014 | ஹோம்லி மீல்ஸ் | ஆசிரியர் பேசில் | ||
2015 | குஞ்சிராமாயணம் | வெள்ளக்குண்டில் தினேசன் | ||
2017 | மாயநதி | இயக்குனர் ஜினு | நட்புக்காக தோற்றம் | |
கோதா | கிராமவாசி | |||
2018 | ரோசாப்பூ | பானு | ||
படையோட்டம் | பிங்கு | |||
நித்தியஹரிதா நாயக்கன் | ஜோபி | |||
2019 | வைரஸ் | டாக்டர் மிதுன் | ||
காக்ஷி: அம்மிணிப்பில்லா | வக்கீல் பிலாகுல் ஷம்சு | |||
லவ் ஆக்ஷன் டிராமா | DJ பிரிஜேஷ் | |||
ஓர்மையில் ஷிஷிரம் | சஞ்சு | |||
மனோகரம் | பிரபு | [11] | ||
கெட்டியோலன்னு என்டே மலாக்கா | குஞ்சாம்பி | |||
மரியம் வன்னு விளக்கூத்தி | பீட்சா வழங்கும் ஆள் | |||
2020 | கௌதமண்டே ரதம் | வெங்கிடி ஐயர் | ||
கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் | குட்டன் | |||
2021 | ஜோஜி | பாதிரி. கெவின் | ||
ஆணும் பெண்ணும் | சாபு | |||
Jan.E.Man | ஜோய்மோன் | |||
மின்னல் முரளி | இளம் அரசியல்வாதி | சிறப்புத் தோற்றம் | ||
ஜாக் அண்ட் ஜில் | ரவி | |||
உல்லாசம் | ஆசி | |||
2022 | டியர் ஃபிரெண்ட் | சஜித் | ||
நா தான் கேஸ் கொடு | நீதிபதி | சிறப்புத் தோற்றம் | ||
பால்து ஜான்வர் | பிரசூன் கிருஷ்ணகுமார் | [12] | ||
ஜெய ஜெய ஜெய ஜெய ஹேய் | ராஜேஷ் | [13] | ||
நோ வே அவுட் | ||||
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் | அவராகவே | குரல் விவரிப்பு | ||
2023 | என்கிலும் சந்திரிக்கே | கிரண் | ||
பூக்காலம் | வழக்கறிஞர் ஜிக்குமோன் | [14] | ||
கதினா கடோரமி அந்தக்கடஹம் | பஷிருதீன் (பச்சு) | [15] | ||
ஃபலிமி | அனூப் சந்திரன் | |||
2024 | வர்ஷங்கல்கு சேஷம் | பிரதீப் | [16] | |
குருவாயூர் அம்பலநடையில் | கைதொளப்பரம்பில் வினு ராமச்சந்திரன் | |||
நுனக்குழி | ஈபி சக்கரியா பூழிக்குன்னல் | [17] | ||
வாழா | காவல் அதிகாரி | நட்புக்காக தோற்றம் | [18] | |
அஜயன்டே ரண்டாம் மோஷனம் | கே. பி. சுரேஷ் | [19] | ||
கப் | ரனீஷ் | [20] | ||
சூக்ஷ்மதர்ஷினி | மேனுவல் | |||
2025 | பிரவின்கூடு ஷப்பு | எஸ். ஐ. சந்தோஷ் C. J. | [21] | |
பொன்மன் | P. P. அஜேஷ் | [22] | ||
படப்பிடிப்பு | ||||
2026 | 'Parasakthi' ![]() |
தமிழ் திரைப்பட படப்பிடிப்பு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basil Joseph is an actor as well? - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-09-08.
- ↑ "How Basil Joseph has become a formidable presence in Malayalam films". The Week (in ஆங்கிலம்). Retrieved 2024-03-24.
- ↑ "It's a techie life: Password to reel adventures". The Hindu.
- ↑ (in ml)Blaze News. 3 February 2022. https://ml.b4blaze.com/trends/basil-joseph-and-guru-somasundaram-new-movie/.
- ↑ "Basil Joseph hits the 30 milestone - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-09-08.
- ↑ "Godha director Basil Joseph to enter wedlock..."
- ↑ "Godha director Basil Joseph to tie the knot with his longtime girlfriend on August 17 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-09-08.
- ↑ "Basil Joseph calls 'Kunjiramayanam' his "favourite" as the movie completes five years". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/basil-joseph-calls-kunjiramayanam-his-favourite-as-the-movie-completes-five-years/articleshow/77801071.cms.
- ↑ "Mammootty, Tovino Thomas to star in Godha director Basil Joseph's next". இந்தியன் எக்சுபிரசு. 17 August 2017 இம் மூலத்தில் இருந்து 27 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220127094152/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/aug/17/mammootty-tovino-thomas--to-star-in-godha-director-basil-josephs-next-1644363.html.
- ↑ "Basil Joseph's Tovino-Thomas-starrer 'Minnal Murali' introduces a homegrown hero with super powers". தி இந்து. 5 September 2020 இம் மூலத்தில் இருந்து 2020-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200907171312/https://www.thehindu.com/entertainment/movies/basil-josephs-tovino-thomas-starrer-minnal-murali-introduces-a-homegrown-hero-with-super-powers/article32529860.ece.
- ↑ "Manoharam movie review: Vineeth Sreenivasan plays a struggling artist in a nice though tame film". Firstpost. 13 October 2019. Archived from the original on 18 November 2020. Retrieved 8 September 2020.
- ↑ Thomas, Vinoy; Anjali, Aneesh. Palthu Janwar Movie : ജോജിക്കു ശേഷം ഭാവനാ സ്റ്റുഡിയോസ്; 'പാല്തു ജാന്വര്' ഓണത്തിന് [Palthu Janwar Movie: Bhavana Studios after Joji; 'Pal Tu Jaanwar' on Onam]. Asianet News (in மலையாளம்). Archived from the original on 10 February 2023. Retrieved 13 July 2022.
- ↑ "Jaya Jaya Jaya Jaya Hey trailer: Funnier version of The Great Indian Kitchen?". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 27 October 2022. Archived from the original on 7 March 2023. Retrieved 7 March 2023.
- ↑ "First single from Pookkaalam out". Cinema Express (in ஆங்கிலம்). 18 March 2023. Archived from the original on 19 March 2023. Retrieved 2023-03-19.
- ↑ "Basil Joseph Starts Shooting For Kadina Kadoramee Andakadaham; Details Inside". News18. 15 September 2023. Archived from the original on 7 March 2023. Retrieved 7 March 2023.
- ↑ "Pranav Mohanlal and Kalyani Priyadarshan's 'Varshangalkku Shehsam' to release in April 2024". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 20 December 2023. Retrieved 23 December 2023.
- ↑ "Shoot completed for Jeethu Joseph-Basil Joseph film Nunakuzhi". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 18 December 2023. Archived from the original on 23 December 2023. Retrieved 23 December 2023.
- ↑ Features, C. E. (2024-07-15). "Vaazha gets a new release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-07-17.
- ↑ "Ajayante Randam Moshanam: Tovino Thomas-Krithi Shetty's fantasy drama goes on floors". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 11 October 2022. Archived from the original on 11 October 2022. Retrieved 7 March 2023.
- ↑ Features, C. E. (2024-09-04). "Mathew Thomas-Basil Joseph starrer Cup confirms release". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-09-04.
- ↑ "Basil Joseph-Soubin Shahir's Pravinkoodu Shappu Gets A Release Date!". Rohit Panikker. Times Now. 29 December 2024. Retrieved 29 December 2024.
- ↑ Madhu, Vignesh (2025-01-18). "Release preponed for Basil Joseph's Ponman". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-18.