பேசின் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேசின் பிரிட்ஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பேசின் பிரிட்ஜ் (Basin Bridge) அல்லது பேசின் பாலம் இந்திய மாநகரம் சென்னையின் வடபகுதியில் ஓட்டேரி நளாவும் பக்கிங்காம் கால்வாயும் இணையும் இடமாகும்.இங்கு சென்னை படகு குழாம் படகு வலித்தல் போட்டிகளை நடத்துகிறது.

பேசின் பாலம் சென்னை புறநகர் இருப்புவழியில் ஓர் தொடர்வண்டி நிலையமாகும். சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த முதல் தொடர்வண்டி சந்திப்பாகும். இந்நிலையத்தில் இருப்புவழி மூன்று வழிகளில் பிரிகிறது:முதலாவது ஆவடி மற்றும் அரக்கோணம் நோக்கியும் இரண்டாவது எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி நோக்கியும் மூன்றாவது சென்னை கடற்கரை நோக்கியும் பிரிகின்றன.

சென்னையின் வடக்கே உள்ள வெளியூர்களுக்கு பேசின் பிரிட்ஜ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசின்_பாலம்&oldid=1683328" இருந்து மீள்விக்கப்பட்டது