பேங் பேங்!
தோற்றம்
| பேங் பேங் | |
|---|---|
தமிழ் திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | சித்தார்த் ஆனந்த் |
| தயாரிப்பு | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
| கதை | சுபாஷ் நாயர் |
| இசை | பாடல்கள்: விஷால் சேகர் பின்னணி இசை: சலிம்-சுலைமான் |
| நடிப்பு | கிருத்திக் ரோஷன் கத்ரீனா கைஃப் |
| ஒளிப்பதிவு | விகாஸ் சிவராமன் சுனில் படேல் |
| படத்தொகுப்பு | ராமேஷ்வர் எஸ். பகத் ரிதேஷ் சோனி |
| கலையகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
| விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | 2 அக்டோபர் 2014[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | ஹிந்தி |
பேங் பேங் (ஆங்கிலம்: Bang_Bang) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்திய நாட்டு ஹிந்தி அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். கிருத்திக் ரோஷன், கத்ரீனா கைஃப், டேனி டென்சோங்பா, ஜாவேத் ஜாப்ரி, ஜிம்மி ஷெர்கில், பவன் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்து மற்றும் வினியோகம் செய்கின்றது.
இது ஹாலிவுட் திரைப்படமான நைட் அண்ட் டே (Knight and Day) என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இந்த திரைப்படம் 2 அக்டோபர், 2014ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nagraj, Aarti (20 May 2014). "Bollywood Film Bang Bang Completes Abu Dhabi Shoot". gulfbusiness.com. Retrieved 31 May 2014.