பேக்
பேக் | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் பேக் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°40′00″N 94°30′00″E / 25.6667°N 94.5000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | பேக் மாவட்டம் |
ஏற்றம் | 1,524 m (5,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,204 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஆங்கிலம் |
• வட்டார மொழி | சோக்கிரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 797108 |
தொலைபேசி குறியீடு | 03865 |
வாகனப் பதிவு | NL.80.94 மற்றும் NL-08 |
இணையதளம் | https://phek.nic.in/ |
பேக் (Phek), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள பேக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு கிழக்கில் 123 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு இமயமலைத் தொடரில் 1,524 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கல்வி
[தொகு]- பேக் அரசுக் கல்லூரி
- கிறிஸ்தவ மிஷின் மேனிலைப் பள்ளி
- பேக் அரசு மேனிலைப் பள்ளி
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 வார்டுகளும், 2,874 குடியிருப்புகள் கொண்ட பேக் நகரத்தின் மக்கள் தொகை 14,204 ஆகும். அதில் 7,975 ஆண்கள் மற்றும் 6,229 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.48% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 781 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.08% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 82.84%, ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 13.41%, இசுலாமியர் 1.17%, கிறித்தவர்கள் 84.88% மற்றும் பிற சமயத்தினர் 0.53% வீதம் உள்ளனர்[1].