பேகம் மக்மூதா சலீம் கான்
பேகம் மக்மூதா சலீம் கான் | |
---|---|
بیگم محمودہ سلیم خان | |
![]() 1962 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் ஒரு புதிய அறிவியல் தொகுதியைத் திறந்து வைக்கும் போது பேகம் மக்மூதா சலீம் கான் பேசுகிறார் | |
கல்வித் துறை அமைச்சர் | |
பதவியில் 1962–1967 | |
குடியரசுத் தலைவர் | முகம்மது அயூப் கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 1913 அமிருதசரசு, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | சூன் 2007 ஆப்டாபாத், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010), பாக்கித்தான். |
துணைவர்(கள்) | அப்துசு சலீம் கான் (தி. 1934; இற. 1957) |
பெற்றோர் |
|
பேகம் மக்மூதா சலீம் கான் (Begum Mahmooda Salim Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். 1913 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் பிறந்தார். ஆரம்பகால அரசியல் பிரமுகராகவும் சனாதிபதி அயூப் கானின் ஆட்சியின் போது மேற்கு பாக்கித்தானில் கல்விக்கான அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார். [1]
பின்னணி
[தொகு]பேகம் சலீம் கான் 1913 ஆம் ஆண்டில், அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற யூனியன் கட்சி அரசியல்வாதியான சர் சிக்கந்தர் அயாத் கானின் முதல் மனைவி பேகம் சூபைதா கானுமின் மூத்த மகள் ஆவார்.
1919 ஆம் ஆண்டில் தாயார் இறந்த பிறகு, இவர் தனது அத்தை மூலம் வளர்க்கப்பட்டார். லாகூரில் உள்ள அலிகார் முசுலீம் பெண்கள் மற்றும் குயின் மேரி கல்லூரியில் கல்வி பயின்றார்.
1934 ஆம் ஆண்டில் அரிபூரைச் சேர்ந்த அரசு ஊழியரான தாலோகர் அப்துசு சலீம் கானை திருமணம் செய்து கொண்டார். கணவர் பிரபுத்துவரான அப்துல் மச்சித் கான் தாரின் மூத்த மகன் ஆவார். இவரது கணவர் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தில் பணியாற்றினார், பின்னர் 1947 ஆம் ஆண்டு முதல் புதிதாக உருவாக்கப்பட்ட பாக்கித்தான் மாநிலத்தின் இராசதந்திர சேவையில் பணியாற்றினார்.
தனது திருமண வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் முதன்மையாக வீட்டைக் கவனிப்பதிலும், இயல்பான பாக்கித்தான் இல்லத்தரசியைப் போலவே தனது குழந்தைகளையும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினார்.[2] இருப்பினும், படிப்படியாக, நலன்புரி நடவடிக்கைகளின் மூலம் மக்களுக்கு உதவுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், மேலும் சமூகத்தில் அதிக சுறுசுறுப்பாக இருந்தார். இது தொடர்பாக இவரது முயற்சிகள் பன்முகத்தன்மை கொண்டவையாகவும் பாக்கித்தான் சமூகத்தின் நலனுக்காகவும் அதிகம் சேர்க்கப்பட்டன.
பரோபகாரம்
[தொகு]1957 ஆம் ஆண்டில் கணவர் இறந்த பிறகு, பேகம் சலீம் கான் பாக்கித்தானின் அபோட்டாபாத்து நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக மற்றும் தொண்டு பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டார், லேடி விகார் உன் நிசா நூன், பேகம் சாரி சர்பராசு, பேகம் குல்சும் சைபுல்லா கான், அத்திய இனாயதுல்லா மற்றும் பேகம் சாயிசுதா சுக்ராவர்டி இக்ரமுல்லா போன்ற பிற நன்கு அறியப்பட்ட பெண் சமூக ஊழியர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன், பாக்கித்தான் குடும்ப திட்டமிடல் சங்கம், பாக்கித்தான் செம்பிறை சங்கம், லோக் விர்சா அருங்காட்சியகம், பாக்கித்தானின் தேசிய கைவினை கவுன்சில், பாக்கித்தானின் காசநோய் எதிர்ப்பு சங்கம், பாக்கித்தானின் எசுஓஎசு குழந்தைகள் கிராமங்கள் மற்றும் பிறவற்றின் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றினார். பாக்கித்தானின் தேசிய இளைஞர் கவுன்சிலின் புரவலர்-தலைவராகவும் இருந்தார், மேலும் பாக்கித்தானிய இளைஞர்களிடையே கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் இவர் செய்த பணிக்காக 1980 ஆம் ஆண்டில் இத்தாலியின் அடிலெய்ட் ரிசுடோரி விருதைப் பெற்றார். சமூக நல நடவடிக்கைகளுக்காக இவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1960 ஆம் ஆண்டுகளில், அயூப் கான் அரசாங்கத்தின் போது, மேற்கு பாக்கித்தானின் அமைச்சரவையில் முதல் பெண் மாகாண அமைச்சராக பதவியேற்றார், 1962-1967 ஆம் ஆண்டு காலத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். ஆனால் அரசியலில் இவரது காலம் சுருக்கமாக இருந்தது. தனது நலன்புரி நடவடிக்கைகளைத் இறக்கும் வரை தொடர்ந்தார்.
தோட்டக்கலை மீது இவருக்கு ஆர்வம் இருந்தது, பூக்களை மிகவும் விரும்பினார்.[4] 2007 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் அபோட்டாபாத்தில் உள்ள வீட்டில் தனது 94 வயதில் அமைதியாக இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Her solo flight".
- ↑ "Tribute to Pakistani Women Part 7 |".
- ↑ "Prominent Pakistani women a Research by Mr.Allah Dad Khan". 8 May 2016.
- ↑ Phyllis Irwin, MD, "Dr Memsaab: Stories of a Medical Missionary Mom", USA: Authorhouse, 2010, pp.74-75; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4520-2538-4