பேகம் அக்தர் ரியாசுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேகம் அக்தர் ரியாசுதீன் [a] (Begum Akhtar Riazuddin) ரியாஸ்-உத்-தின் அல்லது ரியாஸ்-உத்-தீன்[1][2][3][4][5] (பிறப்பு 15 அக்டோபர் 1928) என்று பரவலாக அறியப்படும் இவர் பாக்கித்தானிய பெண்ணிய ஆர்வலர் ஆவார்.இவர் [6] நவீன உருது - பயணக்கட்டுரை எழுத்தாளர் ஆவார் . தனது முயற்சிக்காகப் பல விருதுகளை பெற்றுள்ளார்.

வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

அக்தர் ஜகான் பேகம் கல்கத்தாவில் 15 அக்டோபர் 1928 [6] மற்றும் லாகூரில் உள்ள கின்னெயர்ட் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். 1951 இல் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [7] கற்பித்தல் தொழிலுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [6] இவர் 1952 முதல் 1965 வரை லாகூரில் உள்ள இஸ்லாமியா மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். [7] இவர் மியான் ரியாசுதீன் அகமது என்பவரை, [b] மணந்தார் மற்றும் பேகம் ரியாசுதீன் என்று அறியப்பட்டார். [c] இவர்களின் மகள் செல்வி நிகர் அகமத், [8] இவுரத் அறக்கட்டளையின் தலைவியாக உள்ளார். திரு. ரியாசுதீன், மூத்த அரசு ஊழியர், உருது எழுத்தாளர் சலாவுதீன் அகமதுவின் மருமகன் ஆவார். நீதிபதி சபிகுதீன் அகமது மற்றும் அஸ்மா ஜஹாங்கீர் இவரது கணவர் மூலம் ரியாசுதீனுடன் தொடர்புடையவர்கள் ஆவர். [8]

இலக்கிய வாழ்க்கை[தொகு]

பேகம் ரியாசுதீனின் இலக்கிய வாழ்க்கை 'தனக் பார் கதாம்' (1969) மற்றும் 'சத் சாமுந்தர் பர்' (1963) ஆகிய இரண்டு பயணக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. [9] இவரது பயணக் கட்டுரைகளில், இவர் நையாண்டி கருத்துகளுடன் தனித்துவமான ஒற்றுமைகள் மற்றும் நகைச்சுவையான குறிப்புகளைப் பயன்படுத்துகிறார். [6] இவர் முறைசாரா பாணியில் எழுதுகிறார். [10] இவளுடைய எழுத்துக்கள் எளிமையாகவும் வாசிப்பாளர்களுக்கு சுவாரசியத்தனை ஏற்படுத்தும் வித்ததில் இருக்கின்றன. [9] இவளது பயணக் கட்டுரைகள் நாகரிகம் மற்றும் சமூகத்துடன் மனித மனநிலையைக் கொண்டுள்ளன. [8]

பெண்ணியச் செயற்பாடு[தொகு]

ரியாசுதீன் பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஓர் ஆர்வலர் ஆவார். இவர் தனது நல அமைப்பான, பாக்கித்தானின் பெஹ்புட் அசோசியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார், 1967 ஆம் ஆண்டில் லாகூர் மற்றும் கராச்சியில் பெஹ்புட் அசோசியேஷன் கராச்சி என்ற பெயரில் மற்ற கிளைகள் விரிவுபடுத்தப்பட்டன. இவர் 1980 களின் பிற்பகுதியில் மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டாட்சி செயலாளராக பணியாற்றினார். மார்ச் 1988 இல் வியன்னாவில் நடைபெற்ற பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 32 வது அமர்வு உட்பட பெண்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக பல சர்வதேச மாநாடுகளில் இவர் கலந்து கொண்டார் [7]

1988 இல் பெனாசிர் பூட்டோ பிரதமரானபோது, பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயற்படுத்துவார் எனும் நம்பிக்கையுடன் இருந்தார் மற்றும் கடுமையான ஜியா ஆட்சிக்குப் பிறகு பெண்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்தார். [11]

விருதுகள்[தொகு]

ரியாசுதீன் தனது தன்னார்வ சமூக சேவைக்காக பாக்கித்தான் குடியரசுத் தலைவரிடம் இருந்து சிதாரா-இ-இம்தியாஸ் விருதினை மார்ச் 2000 இல் பெற்றார். ஆகஸ்ட் 2005 இல் மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றார். மார்ச் 1970 இல் உருது 'தனக் பர் கதாம்' என்ற பயணக் கட்டுரையின் முன்னோடிப் பணிக்காக பாக்கித்தான் ரைட் கில்ட் சங்கத்தால் இவருக்கு ஆதம்ஜீ இலக்கிய விருது கொடுக்கப்பட்டது. [12]1000 அமைதிப் பெண்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக நோபலுக்காக பரிந்துரைக்கப்பட்ட 1,000 பெண்களின் குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். [13]

சான்றுகள்[தொகு]

  1. . Lahore: Punjab Textbook Board. 2008. பக். 60. 
  2. . 40, Urdu Bazaar, Lahore: Khalid Book Depot. 2008. பக். 135. 
  3. . Islamabad: National Book Foundation. 2011. பக். 88. 
  4. Hyatt, Ishrat (31 October 2008). "'Lifetime Achievement Award' for Begum Akhtar Riazuddin". The News இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227212954/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=144129&Cat=6&dt=10%2F29%2F2008. பார்த்த நாள்: 12 December 2013. 
  5. 1000 PeaceWomen. "Akhtar Riazuddin". PeaceWomen.org. Archived from the original on 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. 6.0 6.1 6.2 6.3 .  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Aina9" defined multiple times with different content
  7. 7.0 7.1 7.2 Hyatt, Ishrat. "'Lifetime Achievement Award' for Begum Akhtar Riazuddin" இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227212954/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=144129&Cat=6&dt=10%2F29%2F2008. 
  8. 8.0 8.1 8.2 Qazi, Mrs. Rifat (2008). سرمایۂ اُردُو (لازمی)வார்ப்புரு:Rlm.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Ilmi" defined multiple times with different content
  9. 9.0 9.1 Shakir, Naseem (December 2008). Urdu Bazaar, Karachi: Rehber Publishers. பக். 174. 
  10. . 40, Urdu Bazaar, Lahore: Khalid Book Depot. 2006. பக். 136. 
  11. "In Pakistan, Bhutto's rise shakes some traditional views of women". The Christian Science Monitor. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
  12. Aqeel Abbas Jafari (2010) (in Urdu). Pakistan Chronicle (1st ). 94/1, 26th St., Ph. 6, D.H.A., Karachi: Virsa Publications. பக். 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789699454004. 
  13. "Pakistan's Peace Women". jang.com.pk. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.

குறிப்புகள்[தொகு]

  1. بیگم اختر ریاض الدین Begam Aḵẖtar Riaẓu l-dīn
  2. Mian is equivalent to Mr.
  3. Begum is equivalent to Mrs.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_அக்தர்_ரியாசுதீன்&oldid=3777690" இலிருந்து மீள்விக்கப்பட்டது