பேகம்பூர்
பேகம்பூர் (Begampur) என்பது திண்டுக்கல் நகரத்தில் உள்ள ஒரு முக்கிய பகுதி ஆகும்.இது திண்டுக்கல்லில் மதுரை சாலையில் அமைந்துள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]முன்பு திண்டுக்கல் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம் ஆவார்.அமீருன்னிசா பேகத்தின் கணவர் மிர்சா அலிக்கான் (Mirza ali khan) ஆவார்.அமீருன்னிசா பேகம் கி.பி.1772 ல் திண்டுக்கல்லில் மரணமடைந்தார்.அவர் திண்டுக்கல் பெரிய பள்ளி வாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்று அழைக்கப்படுகிறது.[1].[2]
பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்
[தொகு]பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது.அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும்,இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.[3][4]
ஹசரத் அமிருன்னிசா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி
[தொகு]அமீருன்னிசா பேகம் பெயரால் பேகம்பூரில் அரசு உதவி பெறும் அமீருன்னிசா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இது இப்பகுதி மகளிருக்கு கல்விக்காக முக்கியத்துவம் வாயந்தது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ இந்திய விடுதலைப் போரில் இசுலாமியப் பெண்கள்
- ↑ பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், திண்டுக்கல்
- ↑ "Big Mosque – Begambur". Archived from the original on 2016-03-02. பார்க்கப்பட்ட நாள் 2016-04-09.
- ↑ "திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.