பெ. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. சேகர் (பிறப்பு: சூன் 6, 1965) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரம் மாவட்டம் மேல் வசலை எனும் கிராமத்தில் பிறந்த இவர் கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்றவர். மாஸ்டர் சேகர் என்று அழைக்கப்படும் இவர் கராத்தே, களரி, ஜிம்னாஸ்டிக், பாலே நடனம், யோகாசனம் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர். 1987 ஆம் ஆண்டில் தென்னிந்திய தேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். தேக்வாண்டோ பயிற்றுநராகவும் இருந்து வருகிறார். இவர் எழுதிய "தேக்வாண்டோ கற்றுக் கொள்ளுங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சேகர்&oldid=3430370" இலிருந்து மீள்விக்கப்பட்டது