பெவர்லி கடிகாரம்
பெவர்லி கடிகாரம் (Beverly Clock)[1]நியூசிலாந்து, துனெடினில் உள்ள ஒட்டாகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் ஆகும். 1864 ல் ஆர்தர் பெவர்லியால் (Arthur Beverly) இயக்கி வைக்கப்பட்ட கடிகாரம் இன்றளவும், எந்ததொரு கையாற்செய்விக்கப்பட்ட இயக்கமும் இல்லாமல் தானே இயங்கி வருகிறது.[2]
இயங்கும் விதம்
[தொகு]வளிமண்டல அழுத்தம் மற்றும் அன்றாட வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு இக்கடிகாரம் இயங்குகிறது. அதிலும் வெப்பநிலை மாற்றமே முக்கியமானது. காற்று புகா பெட்டியிலுள்ள இடைத்திரையை (diaphragm) உள்ளேயுள்ள ஒரு கன அடி அளவுள்ள ( 28 லிட்டர்) காற்று விரிக்கவோ அல்லது சுருக்கவோ செய்கிறது. வெப்பநிலை மாற்றம் 6 டிகிரி பாரன்ஃகைட் (3.3 கெல்வின்) என்ற அளவில் இருக்கும் போது, தேவையான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அழுத்தம் ஒரு பவுண்டு எடைக்கு உயரும் போது கடிகாரத்தை இயக்கத் தேவையான ஆற்றல் (0.113 சூல் or 31 μWh) கிடைக்கிறது.
அட்டமாசு கடிகாரமும் இதே தத்துவத்தில் செயல்படுகிறது.
1864 ல் ஆர்தர் பெவர்லி இக்கடிகாரத்தை உருவாக்கிய நாளிலிருந்து முடுக்கப்படாமலேயே செயல்பட்டுக் கொண்டுள்ளது. தேவையான வெப்ப மாற்றம் இல்லாதபோது செயலிழக்கும் இக்கடிகாரம், தகுந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள் உருவாகும்போது மறுபடியும் செயல்பட துவங்குகிறது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Citations
- General
- Amon, L.E.S.; Beverly, A.; Dodd, J.N. (1984). "The Beverly clock". European Journal of Physics 5 (4): 195–7. doi:10.1088/0143-0807/5/4/002. Bibcode: 1984EJPh....5..195A. http://www.iop.org/EJ/abstract/0143-0807/5/4/002.
- Marc Abrahams (2001). "The Latest on Long-Running Experiments". Annals of Improbable Research 7 (3). https://www.improbable.com/airchives/paperair/volume7/v7i3/long-run-7-3.html. பார்த்த நாள்: 2018-03-03.