பெல்வர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்வர் கோட்டை
கோட்டையின் வெளித் தோற்றம்
அமைவிடம்பால்மா தே மல்லோர்க்கா, எசுப்பானியா
உயரம்112 மீட்டர்
கட்டப்பட்டது1311
கட்டியவர்பெரி சல்வா
உரிமையாளர்பல்மா தெ மல்லோர்க்கா நகர சபை
அலுவல் பெயர்Castillo Bellver
வகைநகர்த்த முடியாதது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டதுஜூன் 3, 1931[1]
உசாவு எண்RI-51-0000411

பெல்வர் கோட்டை[2] (காட்டலான்: Castell de Bellver) என்பது கோதிக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி பால்மா தே மல்லோர்க்காவுக்கு வட மேற்கே உள்ள தீவான மயோர்க்கா, பலேரிக் தீவுகள், எசுப்பானியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். இது பதினான்காம் நூற்றாண்டில் மஜோர்க்காவின் இரண்டாம் ஜெம்சுக்காக அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருக்கும் சில வட்ட வடிவமான கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.[3] 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20 நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான காலத்தில் இது ஒரு இராணுவ தடுப்பு முகாமாகவும் சிறையாகவும் செயற்பட்டது. தற்காலத்தில் மக்களே இதைப் பராமரிக்கின்றனர். இத்தீவின் பிரதான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருப்பதுடன் நகரத்தின் வரலாற்று அருங்காட்சியகமாகவும் செயற்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்வர்_கோட்டை&oldid=3791801" இருந்து மீள்விக்கப்பட்டது