பெல்லி லலிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்லி லலிதா (Belli Lalitha) (பிறந்தது: 1974 ஏப்ரல் 26 - இறந்தது: 1999 மே 26) இவர் ஓர் இந்திய நாட்டுப்புற பாடகராக இருந்தர். பெல்லி லலிதா ஒரு பிரபலமான பாடகியாக, இவர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். இவர் எதிர்ப்பின் குரலாகவும், டோல் டெபாவின் தலைவராகவும், தெலுங்கானா கலா சமிதியின் நிறுவனராகவும் இருந்தார். [1] இவர் 26 மே 1999 அன்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள போங்கிர் என்ற ஊரில் இறந்தார். [2] பெல்லி லலிதாமுதன்மையாக முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டமாக இருந்த தெலுங்கானா போராட்டத்தின் கடைசி கட்டத்தின் குரலாகவும் பிரதிநிதியாகவும் இருந்தார். இவர் ‘லலிதாக்கா’ என்றும் அழைக்கப்பட்டார். மேலும் பாலியல் கடத்தல், குடிப்பழக்கம், குட்கா நுகர்வு மற்றும் சாதி எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை ஏற்பாடு செய்திருந்தார்.[3] மேலும், இவர் 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிச மற்றும் லெனினிஸ்ட்), மக்கள் போர் அணியின் அனுதாபியாகவும் நம்பப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

இவர் தெலுங்கு மொழி பேசும் குருமா இந்து குடும்பத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டம், ஆத்மகூர் மண்டலத்தின், நாஞ்சர்பேட்டை என்ற இடத்தில் பிறந்தார். இவருக்கு மொத்தம் ஐந்து உடன்பிறப்புகள் இருந்தனர். குடும்பத்தின் ஐந்து மகள்களில் நான்காவதாக இவர் பிறந்தார். தீவிர வறுமை காரணமாக இவரது குடும்பத்தினர் இவரது தாயின் சொந்த இடமான போங்கிரியில் குடியேற வேண்டியிருந்தது. வறுமை காரணமாக சிறுவயதில் கல்வியைத் தொடர முடியவில்லை. மேலும் இவரது மிகவும் சிறுவயதிலேயே திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவருக்கு சமூக ஆர்வலரும் மற்றும் ஒரு அரசு ஊழியருமான பெல்லி கிருட்டிணா என்ற ஒரு சகோதரர் இருந்தார். மேலும் இவருக்கு 5 சகோதரிகள் இருந்தனர். 1990களின் பிற்பகுதியில் குடிமை உரிமைகள் இயக்கத்தில் தீவிரமாகவும், தெலுங்கானா பிராந்தியத்திற்கான மாநிலத்துக்கான ஆர்வலராகவும் இருந்தார். [4] இவரது தந்தை ஒரு ஓகு கதை (யாதவ் மற்றும் குருமா சமூகங்களில் தோன்றிய நாட்டுப்புற இசை)பாடகர் மற்றும் ஒரு தொழிலாளியாவார். இவர் தெலுங்கானா மாநிலத்திற்காக போராடி வந்தார். மேலும், கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக இருந்தார். இவர் இறப்பதற்கு முன்னர் போங்கிர் தொகுதியிலிருந்து 1999 தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போடியிட இவருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.

செயல்பாடு[தொகு]

பெல்லி லலிதா போங்கிரின் சூர்யா வான்ஷி பருத்தி ஆலையில் ஒரு தொழிலாளியாக பணிபுரிந்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில், இவர் தனது சக தோழர்களையும் தொழிலாளர்களையும் ஆலையில் ஒன்றிணைத்து போராடினார். இவர் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தில் (சிஐடியு) சேர்ந்தார். மேலும் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தார்.

இறப்பு[தொகு]

1999 ஆம் ஆண்டில், இவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். [5] இவரது கொலையில் அப்போதைய தெலுங்கு தேசக் கட்சியின் உள்துறை அமைச்சர் அலிமினெட்டி மாதவா ரெட்டி என்பவர் சம்பந்தப்பட்டார். ஆனால் பின்னர் உள்ளூர் நக்சலைட்டான கிங்பின் முகமது நயீமுதீன் என்பவர் மேல் மேலதிக ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டது. [6] [7] [8] இவரது மூன்று சகோதரர்களும் இதே போல் கொல்லப்பட்டனர். மீதமுள்ள சகோதரர் கிருட்டிணா 2000 முதல் 2017 வரை மறைந்து வாழ்ந்து வந்தார். [9]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லி_லலிதா&oldid=3315831" இலிருந்து மீள்விக்கப்பட்டது