பெல்லாரி ராகவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்லாரி ராகவா
பிறப்புதாடிபத்ரி ராகவாச்சாரியுலு
2 ஆகத்து 1880
அனந்தபூர், இந்தியா
இறப்பு16 ஏப்ரல் 1946(1946-04-16) (அகவை 65)
பணிநடிகர்
நாடகாசிரியர்

பெல்லாரி இராகவா (Bellary Raghava; 2 ஆகத்து 1880 - 16 ஏப்ரல் 1946) தாடிபத்ரி ராகவாச்சாரியுலு என்ற இயற்பெயரால் அறியப்படும் இவர் ஓர் இந்திய நாடக ஆசிரியரும், நடிகரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு நாடகத்திலும், திரைப்படத்திலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1][2] இவரது மாமா தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு தெலுங்கில் ஒரு முன்னோடி நாடக ஆசிரியராக இருந்தார். மேலும் இவரை மேடைக்கு அறிமுகப்படுத்தினார். இராகவா பெல்லாரியைச் சேர்ந்த மற்றொரு நாடக ஆசிரியரான கோலாச்சலம் சீனிவாச ராவ் என்பவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். சரோஜினி கொப்பரபு, பத்மாவதி கொம்முரி, அன்னபூர்ணா காக்கிநாடா போன்ற பெண் கலைஞர்களும் வாசுதேவராவ் கே.எஸ்., அப்பாராவ் பசவராஜு, பண்டா கனகலிங்கேசுவர ராவ் போன்ற ஆண் கலைஞர்களும் இவரது மாணவர்களில் அடங்குவர் .[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இராகவா, பெல்லாரி உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தார். 1905இல் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு சட்டப் பயிற்சி செய்தார். 12 வயதில், இவர் பெல்லாரியில் ஷேக்ஸ்பியர் சங்கத்தை நிறுவி, வில்லியம் சேக்சுபியரின் நாடகங்களில் நடித்தார். பெங்களூரில் சீகோலாச்சலம் சீனிவாச ராவவின் "சுமனோகரம்" என்ற நாடகக் குழுவில் பல்வேறு நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 1909இல் பெங்களூரில் அமெச்சூர் நாடக சங்கத்தை நிறுவினார்.

திரைப்படம்[தொகு]

1936 இல், எச்.எம். ரெட்டியின் திரௌபதி மான சம்ரட்சனம், என்ற நாடகத்தில் இராகவா துரியோதனனாக நடித்தார். பின்னர் இவர் ரைத்து பிட்டா (1939), சண்டிகா (1940) [4] ஆகிய திரைப்படங்களில் தோன்றினார். மேலும் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார்.[5]

இறப்பு[தொகு]

இராகவா ஏப்ரல் 16, 1946 இல் இறந்தார். பல்லாரி ராகவ புரஸ்காரம் விருது இவரது நினைவாக நிறுவப்பட்டது. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பங்களித்த திறமையான கலைஞர்களுக்கு இது வழங்கப்படுகிறது. 1981இல், இவரது நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.[6]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லாரி_ராகவா&oldid=3505899" இருந்து மீள்விக்கப்பட்டது