பெல்லம்கொண்டா சீனிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெல்லம்கொண்டா சீனிவாஸ்
Bellamkonda Sai Srinivas (cropped).jpg
2016இல் சீனிவாஸ்
பிறப்புபெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ்
3 சனவரி 1993 (1993-01-03) (அகவை 29)[1]
குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
கல்விLee Strasberg Theatre and Film Institute
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
பெற்றோர்பெல்லம்கொண்டா சுரேஷ்

பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் (Bellamkonda Sai Sreenivas) (பிறப்பு 3 ஜனவரி 1993) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகராவார். திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான இவர், அல்லுடு சீனு (2014) என்ற அதிரடி நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.

தொழில்[தொகு]

சீனிவாஸ், சமந்தா அக்கினேனியும் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அல்லுடு சீனு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2]

அதே ஆண்டில் ரபாசா என்ற படத்தில் தனது தந்தையுடன் இணைந்து தயாரிப்பாளரானார். ஆனால், இப்படம் வணிக ரீதியில் தோல்வியடைந்தது.[3] 

2016 ஆம் ஆண்டில், தமிழில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஸ்பீடூன்னோடு என்ற படத்தில், சொனரிக்கா பாடோரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் நடித்திருந்தார். ரகுல் பிரீத் சிங்கின் இணையாக "ஜெய ஜானகி நாயகா" என்ற படத்திலும், பூஜா ஹெக்டேவுடன் "சாக்ஷியம்" என்ற படத்திலும், காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோருடன் "கவசம்" என்ற படத்திலும், "சீதா" என்ற படத்திலும் மீண்டும் காஜல் அகர்வாலுக்கு இணையாக இவர் நடித்தார்.[4] [5] [6] [7] [8] அனுபமா பரமேசுவரனுடன் இணையாக தமிழில் வெளிவந்த ராட்சசனின் தெலுங்கு மறுஆக்கமான "ராக்ஷாசுடு" படத்திலும் நடித்தார். 2021ஆம் ஆண்டில், இவர் நபா நடேஷ், அனு இம்மானுவேல் ஆகியோருடன் "அல்லுடு ஆதர்ஸ்" என்ற படத்தில் நடித்தார். [9]

நவம்பர் 2020இல், பெல்லம்கொண்டா தெலுங்குத் திரைப்படமான சத்ரபதி (2005) படத்தின் இந்தி மறுஆக்கத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது, இது இவரது பாலிவுட் அறிமுகமாக இருக்கும். வி.வி விநாயக் இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]