பெல்மேஷ் முகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1992-ல் ஒரு வீட்டில் தோன்றிய பெண்ணின் மங்கலான முகம்

பெல்மேஷ் முகங்கள் (Bélmez Faces) என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறைவது என்று சிலரால் நம்பப்படும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

20-ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் கல்லீ ரியல் (Calle Real) என்னும் தெருவில் அமைந்த 5ஆம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez) சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, சமையலறையின் நிலப்பகுதியில் ஒரு பெண்ணின் உருவம் தோன்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று வீடு முழுவதும் முகங்கள் தோன்றியது. இதனால் இந்த மர்மச் சம்பவத்திற்கு பெல்மேசு முகங்கள்(The Faces of Belmez) என்ற பெயர் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. Psychic and Paranormal
  2. Tort, César (1995). "Bélmez Faces Turned Out to Be Suspiciously Picture-like Images". Skeptical Inquirer. 19 (2) (Mar/Apr): 4. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்மேஷ்_முகங்கள்&oldid=3222687" இலிருந்து மீள்விக்கப்பட்டது