பெல்டியர் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2[தொகு]

பெல்டியர் விளைவு

  • 1834இல் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பெல்டியர் என்பவர் இரு வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும் போது உலோகங்களின் ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்படும் மற்றொன்றில் வெப்பம் உட்கவரப்படும் எனக் கண்டறிந்தார். இதுவே பெல்டியர் விளைவு எனப்படும்.
  • இது சீபக் விளைவின் மறுதலை ஆகும்

பெல்டியர் குணகம்

  • இரண்டு வெவ்வேறான உலோகங்கள் கொண்ட சந்தியில் ஒரு ஆம்பியர் மின்னோட்டம் ஒரு வினாடி நேரத்தில் (ஒரு கூலும்) பாயும்போது வெளிவிடப்படும் அல்லது உட்கவரும் ஆற்றலின் அளவு பெல்டியர் குணகம் எனப்படும். இதன் அலகு வோல்ட் ஆகும். ஒரு சந்தியில் பெல்டியர் மின் அழுத்தம், அந்த சந்தியில் பெல்டியர் குணகம் ஆகும். பெல்டியர் குணகமானது பயன்படும் உலோகங்கள் மற்றும் சந்திகளின் வெப்ப நிலையினைப் பொருத்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்டியர்_விளைவு&oldid=2769322" இருந்து மீள்விக்கப்பட்டது