உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்ஜிய பயன்பாட்டு அறிவியல் கல்வி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்ஜிய பயன்பாட்டு அறிவியல் கல்வி மன்றம் (Royal Belgian Academy Council of Applied Sciences - BACAS) என்பது பெல்ஜியத்தில் செயல்படும் அறிவியல் மன்றம் ஆகும். இது பெல்ஜியத்தில் உள்ள பிளெமிஷ் மற்றும் பிரான்சிய மொழி பெல்ஜியத்தின் அறிவியல் மற்றும் கலைகளுக்கான அரச அறிவியல் அகாதமிகளின் கீழ் இயங்கும், பிளெமிஷ் அமைப்பான 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அகாடமி குழு' மற்றும் வல்லூன் அமைப்பு ஆகிய குழுக்களை உள்ளடக்கியது. பெல்ஜிய பயன்பாட்டு அறிவியல் கல்வி மன்றம் அமைப்பானது அகாதமியிலிருந்து பத்து உறுப்பினர்களையும், தொழில் துறையில் இருந்து பத்து உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இந்த மன்றம் சமூகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தை ஆய்வு செய்வதுடன், பெல்ஜிய அரசாங்கத்திற்கும் தொழில் துறை தலைவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது.[1][2]

2008-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்த இரு குழுக்களும் இரு அகாதமிகளின் முழுமையான பிரிவுகளாக மாற்றப்பட்டன. இதன் பொருள், இதன் உறுப்பினர்கள் பெல்ஜியம் மன்னரால் அகாடமியின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதாகும். பிரெஞ்சு மொழி பேசும் அகாதமியைப் பொறுத்தவரை, CAPAS என்பது 'தொழில்நுட்பம் மற்றும் சமூகப் பிரிவு' என்றும், CAWET என்பது 'தொழில்நுட்ப அறிவியல் பிரிவு' என்றும் மாற்றமடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "The Royal Academies for Science and the Arts of Belgium". Retrieved 2026-07-08.
  2. ↑ "Belgium, Royal Academies for Science and the Arts of Belgium (RASAB)". Retrieved 2026-07-08.

வெளி இணைப்புகள்

[தொகு]