பெலோரஸ் ஜேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலோரஸ் ஜேக்
1909இல் பெலோரஸ் ஜேக்
இனம்Risso's dolphin
செயற்பட்ட ஆண்டுகள்1888–1912
அறியப்படுவதற்கான
 காரணம்
Escorting ships near பிரெஞ்ச் நீரிணை
Appearanceசாம்பல் கோடுகள் அல்லது திட்டுக்கள் கொண்ட வட்ட, தலை கொண்ட வெள்ளை நிற ஓங்கில்
Cook Strait is located in நியூசிலாந்து
Cook Strait
Cook Strait
குக் நீரிணையின் அமைவிடம்

பெலோரஸ் ஜேக் (Pelorus Jack, fl. 1888 - ஏப்ரல் 1912) என்பது ஒரு ரியோசாவின் வகை ஓங்கில் ஆகும். இது 1888 மற்றும் 1912 க்கு இடையில் 24 ஆண்டுகள் நியூசிலாந்தின் குக் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக இருந்ததற்காக பிரபலமானது. பெலோரஸ் ஜேக் வழக்கமாக அட்மிரால்டி விரிகுடாவில் கேப் பிரான்சிஸ் மற்றும் காலினெட் பாயிண்ட் இடையே, பிரெஞ்சு நீரிணைக்கு அருகில் வெலிங்டன் மற்றும் நெல்சன் இடையே ஆபத்தான நீர்வழியில் பயணிக்கும் கப்பல்கள் விபத்தில் சிக்காமல் செல்ல வழிகாட்டியது. [1] [2]

இந்த ஓங்கிலுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது என்பது தெரியவில்லை. பிரெவர்டன்ஸ் நாட்டிக்கல் குரியோசிட்ஸ் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டதன்படி, கடல் வழிகாட்டி கருவியான பெலோரசின் பெயரைக் கொண்டு இந்த மீனுக்கு பெயரிடப்பட்டது என்று கூறப்படுகிறது [3] இருப்பினும், டீ அரா - என்னும் நியூசிலாந்தின் கலைக்களஞ்சியமானது, அந்த பெயரானது பெலோரஸ் சவுண்ட் எனப்படும் ஆழமும், அகலமும் கொண்ட கடற் கால்வாயின் பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறது. ஏனென்றால் அந்த கடல் கால்வாயின் நுழைவாயிலில் இது தொடர்ந்து கப்பல்களைச் சந்தித்துவந்தது. [4]

ஒரு சமயம் நீரிணையில் கடந்து சென்ற ஒரு கப்பலில் இருந்த ஒருவனால் பெலோரஸ் ஜேக் சுடப்பட்டது. என்றாலும் அதில் இருந்து பெலாரஸ் ஜேக் தபிபியது. அதன் பின்னர் 1904 ஆண்டு நியூசிலாந்தில் பெலாரஸ் ஜோசை பாதுகாக்க ஒரு சட்டம் இயற்றப்பட்டது. [5]

தோற்றம்[தொகு]

பெலோரஸ் ஜேக் தோராயமாக 4 மீட்டர்கள் (13 அடி) நீளமானது. அதன் வெள்ளை நிற உடலில் சாம்பல் நிற திட்டுகள் கொண்டதாகவும், வட்டமான வெள்ளை நிறத் தலையோடு இருந்தது. [6] இது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. என்றாலும், இதன் ஒளிப்படங்களிலிருந்து ரிஸோவின் ஓங்கிலான, கிராம்பஸ் கிரிசியஸ் என அடையாளம் காணப்பட்டது. இது நியூசிலாந்து கடல் பகுதியில் அரிதாக காணப்பட்டும் ஒரு இனமாகும். மேலும் அந்த பகுதியில் 12 ரிஸோவின் ஓங்கில்கள் மட்டுமே காணப்பட்டதாக பதிவாகியுள்ளது. [7] [8]

பெலோரஸ் ஜாக். ஏ. பிட் எடுத்த ஒளிப்படம்.

வரலாறு[தொகு]

பெலோரஸ் ஜேக் ஒவ்வொரு கப்பலுடனும் 20 நிமிட நேரம் செலவிட்டு கப்பலின் முன் நீந்தியபடி கப்பல்களுக்கு வழிகாட்டும். சில கப்பல்கள் நீரிணையில் நுழைய ஜேக் வழிகாட்ட வரும் வரை காத்திருந்தன.

இதன் பெயரில் பெலோரஸ் என்ற சொல் இருந்தபோதிலும், இது அருகிலுள்ள பெலோரஸ் சவுண்ட் பகுதியில் வாழவில்லை; அதற்கு பதிலாக, இது அடிக்கடி பிரஞ்சு நீரிணையின் ஆபத்தான கடல் பாதை வழியாக கப்பல்களை வழிநடத்தியது. இருப்பினும், இதன் பழக்கவழக்கங்களை அறிந்த சில உள்ளூர்வாசிகள் இது பிரெஞ்சு நீரிணை வழியாக செல்லவில்லை, ஆனால் செட்வோட் தீவுகளுக்கு அருகில் இருந்தது என்று கூறினர். [9]

1888 ஆம் ஆண்டில் இசுக்கூனர் கப்பல் டி'ர்வில் தீவுக்கும் தெற்குத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு காலாவாயான பிரெஞ்சு நீரிணையை தெருங்கியபோது பெலோரஸ் ஜேக் முதன்முதலில் அக்கப்பலின் முன்னால் தோன்றியது. கப்பலின் முன்னால் ஓங்கில் மேலும் கீழும் குதிப்பதை கப்பல் குழுவினர் பார்த்தபோது, அவர்கள் இதைக் கொல்ல எத்தனித்தனர். ஆனால் கப்பல் தலைவரின் மனைவி அவர்களை அங்கிருந்து போகும்படி கூறினார். பின்னர் அவர்கள் ஆச்சரியப்படும்படி, அந்த குறுகிய கால்வாய் வழியாக கப்பலை ஓங்கில் வழிநடத்தியது. அதன்பிறகு பல ஆண்டுகளாக, இது அங்கு வந்த ஒவ்வொரு கப்பலையும் பாதுகாப்பாக வழிநடத்தியது. பாறைகளும், வலுவான நீரோட்டங்கள் கொண்ட, இப்பகுதி கப்பல்களுக்கு ஆபத்தான இடமாகும். ஆனால் ஜேக் வழிகாட்டிய கப்பல்களுக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை.

பல மாலுமிகளும், பயணிகளும் பெலோரஸ் ஜேக்கை பார்த்தனர். மேலும் இது உள்ளூர் செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டு அஞ்சல் அட்டைகளில் இடம்பெற்றது.

ஜேக் கடைசியாக 1912 ஏப்ரலில் காணப்பட்டது. வெளியிலிருந்து வந்த ஒரு திமிங்கலங்கள் இதை தின்றிருக்கலாம் என்ற கருத்து உட்பட, இது காணாமல் போனது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலாவந்தன. இருப்பினும், பெலோரஸ் ஜேக் வயது முதிர்ந்த ஒரு விலங்கு என்று ஆராய்ச்சிகள் கூறுகிறன. இதன் தலையும், உடலும் இன்னும் வெளிறத் தொடங்கியது. இவ்வாறு மேலும் வெண்மையாவது முதுமைக்கான அறிகுறிகளாகும். எனவே இது இயற்கையான காரணங்களால் இறந்திருக்கலாம் எனப்படுகிறது. [7]

1989 முதல், பெலோரஸ் ஜேக் குக் நீரிணையின் குறுக்கே செல்படும் படகு சேவையான இன்டெரிஸ்லேண்டரின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. [10]

துப்பாக்கி சூட்டு நிகழ்வு[தொகு]

1904 ஆம் ஆண்டில், எஸ். எஸ் பென் கப்பலில் இருந்த ஒருவர் பெலோரஸ் ஜேக்கை துப்பாக்கியால் சுட முயன்றார். அவரது அந்த தீங்கு செயலில் இருந்து ஜேக் தப்பியபோதும், பெலோரஸ் ஜேக் தொடர்ந்து கப்பல்களுக்கு உதவியது. இருப்பினும், செவிவழி தகவல்களின்படி, அந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ். எஸ் பென்குயின் கப்பலுக்கு மட்டும் ஜேக் வழிகாட்டவில்லை. 1909 இல் குக் ஜலசந்தியில் எஸ். எஸ். பென்குயின் கப்பல் விபத்தில் சிக்கி மூழ்கியது [5] [11] [12]

பாதுகாப்பு[தொகு]

துப்பாக்கிச் சூடு நிகழ்வைத் தொடர்ந்து, பெலோரஸ் ஜேக்கை பாதுகாக்க நியூசிலாந்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஜேக் ஓங்கில் 1904 செப்டம்பர் 26 அன்று கடல் மீன்வள சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டது. பெலோரஸ் ஜேக் 1912 இல் காணாமல் போகும் வரை அந்த சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது. [5] [8] உலக அளவில் தனியொரு கடலுயிரைப் பாதுகாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது அதுவே முதல்முறை என்று நம்பப்படுகிறது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. Casey, Susan (2015-09-09). "Why do dolphins seek out encounters with humans?". The Independent. பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
  2. Lawson, Will (September 1924). "Pelorus Jack: A Complete History of the Wonderful Pilot Fish of New Zealand". Pacific Marine Review: The National Magazine of Shipping (San Francisco: J. S. Hines): 459, 466. https://books.google.com/books?id=RT8fAQAAMAAJ&newbks=0&printsec=frontcover&pg=PA459&dq=%22Pelorus+Jack%22&hl=en. 
  3. Breverton, Terry, 1946-. Breverton's nautical curiosities : a book of the sea. https://www.worldcat.org/oclc/909290007. 
  4. "The story of Pelorus Jack".. 
  5. 5.0 5.1 5.2 Monaco, Annalisa Lo (2020-08-18). "Pelorus Jack: lo straordinario Delfino "pilota" della Nuova Zelanda". Vanilla Magazine (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
  6. "The Legend of Pelorus Jack". pelorus-jack.com. Archived from the original on 21 January 2008. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
  7. 7.0 7.1 Parkinson, Brian. "Unique Wildlife of New Zealand – Pelorus". Ecotours New Zealand. Archived from the original on 9 October 2006. பார்க்கப்பட்ட நாள் 29 December 2006.
  8. 8.0 8.1 Maori, A. G. (June 1913). "Pelorus Jack". The Mid-Pacific Magazine (Honolulu: A. H. Ford) 5 (6): 565–569. https://books.google.com/books?id=CFQ7AQAAIAAJ&newbks=0&printsec=frontcover&pg=PA566&dq=%22Pelorus+Jack%22&hl=en. 
  9. 9.0 9.1 Alpers, A.F.G. (1966). "Pelorus Jack". An Encyclopaedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 29 December 2006.
  10. New Zealand's Cook Strait Rail Ferries, New Zealand Maritime Record
  11. Pelorus Jack fact sheet பரணிடப்பட்டது 21 மே 2010 at the வந்தவழி இயந்திரம் at the Museum of Wellington
  12. "The Quest for Wild Dolphins". Archived from the original on 2006-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோரஸ்_ஜேக்&oldid=3691453" இலிருந்து மீள்விக்கப்பட்டது