பெலீஸ் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெலீஸ் பல்கலைக்கழகம்
University of Belize
குறிக்கோளுரைநாட்டிற்கு முன்னேற்றத்தை அளிப்பது கல்வி (Education Empowers A Nation)
வகைதேசியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்ஆகஸ்டு 1, 2000
கல்வி பணியாளர்
400
பட்ட மாணவர்கள்4,000
அமைவிடம்பெல்மோப்பான், பெலீஸ்
வளாகம்
 • மத்திய வளாகம்: நகர்ப்புறம்
 • மேற்கு லந்திவார் வளாகம்: நகர்ப்புறம்
 • பிரீடவுன் வளாகம்: நகர்ப்புறம்
 • புண்டா கோர்தா டவுன் வளாகம்: ஊர்ப்புறம்
Colorsகத்தரி நீலம் & தங்கம்
         
தடகள விளையாட்டுகள்யூபீ பிளாக் ஜாகுவார்ஸ்
சுருக்கப் பெயர்UB
நற்பேறு சின்னம்தி பிளாக் ஜாகுவார்
இணையத்தளம்www.ub.edu.bz

பெலீஸ் பல்கலைக்கழகம் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெலீஸ் நாட்டில் உள்ளது. இங்கு இள நிலை, முது நிலை ஆகிய பிரிவுகளில் பட்டங்களை வழங்குகின்றனர். [1]இதன் மத்திய வளாகம் பெலீஸ் நாட்டின் பெல்மோப்பான் நகரில் அமைந்துள்ளது. இங்கு சூரிய ஆற்றல் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் மின்சாரத் தேவைகளில் தன்னிறைவு அடைய முடியும்.

வளாகங்கள்[தொகு]

முற்காலத்தில், தனித் தனி கல்லூரிகளாக செயல்பட்டவற்றை ஒன்றிணைத்து பெலீஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக அறிவிக்கப்பட்டன.

 • பெல்மோப்பான் மத்திய வளாகம்

இந்த வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ளூர் மொழிகளுக்கான கல்வி மையம் அமைந்துள்ளது. இங்கு ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்கின்றனர். இங்கு அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன.

 • வேளாண்மை வளாகம்

இங்கு வேளாண்மை, இயற்கை வளங்கள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இரண்டாண்டு கல்வித் திட்டங்கள் உள்ளன.

 • பெலீஸ் நகர வளாகங்கள்
மேலாண்மை, சமூகவியல் வளாகம்
இங்கு வணிகம் தொடர்பான பாடப்பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.
கலை, கல்வி வளாகம்
இங்கு கலை, செவிலியர் பயிற்சி, உடல் நலக் கல்வி, சமூக சேவை உள்ளிட்ட

பாடப்பிரிவுகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

அறிவியல், தொழில் நுட்ப வளாகம்
 • புண்டா கோர்தா வளாகம் [2]

விளையாட்டு[தொகு]

இங்கு கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், மென்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கராத்தே, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கின்றனர். [3]

சான்றுகள்[தொகு]

 1. "University's Goals". University of Belize. பார்த்த நாள் 2012-04-12.
 2. "Campus Locations". University of Belize. பார்த்த நாள் 2012-04-12.
 3. Recreation and Sports

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 17°14′37.10″N 88°45′36.55″W / 17.2436389°N 88.7601528°W / 17.2436389; -88.7601528