உள்ளடக்கத்துக்குச் செல்

பெலிவுல்லோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°43′00″N 80°46′00″E / 6.71667°N 80.76667°E / 6.71667; 80.76667

பெலிவுல்லோயா

பெலிவுல்லோயா
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°42′00″N 80°46′00″E / 6.7°N 80.7667°E / 6.7; 80.7667
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 736 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70140
 - +9445
 - SAB

பெலிவுல்லோயா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பெலிவுல்லோயா என்பது இப்பகுதியினூடாக பாயும் பெலிவுல் ஆற்றின் சிங்கள மொழிப் பெயரிலிருந்து தோன்றியப் பெயராகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. இந்நகரம் சுற்றுலாப் பயணிகளில் கவனத்தைப் பெற்ற இடங்களில் ஒன்றாகும். ஓட்டன் சமவெளியின் உலக முடிவு என அழைக்கப்படும் 1000 அடி செங்குத்துச் சாய்வின் கீழ்ப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

[தொகு]

பெலிவுல்லோயா மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 736 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை மூலம் கிடைக்கிறது. 1900-2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

[தொகு]

இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர்.

கைத்தொழில்

[தொகு]

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. இரத்தினக்கல் அகழ்வுகளும் நடபெற்று வருகின்றன.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிவுல்லோயா&oldid=2068469" இலிருந்து மீள்விக்கப்பட்டது