உள்ளடக்கத்துக்குச் செல்

பெலா செண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலா செண்டே
பிறப்புசனவரி 4, 1982
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிபாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
வலைத்தளம்
www.belashende.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

பெலா செண்டே (Bela Shende) ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார். இவர் பாலிவுட், பிற இந்திய திரைப்படத் துறைகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஜோதா அக்பர் திரைப்படத்தில் இருந்து மன் மோகனா, வாட்ஸ் யுவர் ராஷீ? திரைப்படத்தில் இருந்து சு சே, நடரங் திரைப்படத்தில் இருந்து வஜ்லே கி பாரா, அப்சரா ஆலி ஆகியவை இவரது பிரபலமான பாடல்களாகும். 2014-ஆம் ஆண்டில், மராத்தித் திரைப்படமான துகுயா தர்மா கொஞ்சாவில் இருந்து குர்குரா பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை இவர் பெற்றார். [1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

பெலா செண்டே மகாராட்டிர மாநிலத்தின் புனே நகரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவ் செண்டே, தாய் மேதா செண்டே ஆவர். இவரது பாட்டி குசும் செண்டே கிரானா கரானா மரபைச் சேர்ந்த செவ்வியல் இசைப் பாடகியாவார். இவரது சகோதரி சாவனி செண்டேவும் இந்துஸ்தானி செவ்வியல் இசைப் பாடகியாவார். பெலா செண்டே வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

இசைப் பயணம்

[தொகு]

16 வயதில் ஜீ சாரேகமா தொலைக்காட்சி இசைப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெலா செண்டே கவனம் பெற்றார். பின்னர் பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாகப் பணியாற்றத் தொடங்கினார்.

இவர் இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், சங்கர்–எல்சான்–லாய், அஜய்–அதுல், யுவன் சங்கர் ராஜா, எம். எம். கீரவாணி உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். பாஹேலி, ஜோதா அக்பர், வாட்ஸ் யுவர் ராசி?, ராஜ்ஜோ, காவியத் தலைவன், மொகஞ்சோதாரோ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

மராத்தித் திரைப்படமான நடரங் படத்தில் இடம்பெற்ற அப்சரா ஆலி மற்றும் வாஜ்லே கி பாரா பாடல்கள் இவருக்கு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தன. 2013-ஆம் ஆண்டு துஹ்யா தர்மா கொன்சா என்ற மராத்தித் திரைப்படத்தில் இடம்பெற்ற குர்குரா பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[2]

தமிழில் கனிமொழி, கச்சேரி ஆரம்பம், பதினாறு, நீதானே என் பொன்வசந்தம், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • 2000 –ஜீ சங்கீத விருது– ஆண்டின் அறிமுகப் பாடகி
  • 2009 –மிர்ச்சி இசை விருது – சிறந்த பெண் பாடகி (மன் மோகனா, ஜோதா அக்பர்)
  • 2010 – ஜீ சித்ரா கரவ் புரசுகார் விருது– சிறந்த பெண் பின்னணிப் பாடகி
  • 2010 – மகாராட்டிர மாநில விருது – சிறந்த பெண் பின்னணிப் பாடகி
  • 2014 – தேசிய திரைப்பட விருது – சிறந்த பெண் பின்னணிப் பாடகி (குர்குரா, துஹ்யா தர்மா கொன்சா)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Press Information Bureau (PIB), India. "61st National Film Awards Announced". செய்திக் குறிப்பு.
  2. "खास भेट - बेला शेंडे". Archived from the original on 5 March 2016. Retrieved 26 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலா_செண்டே&oldid=4556301" இலிருந்து மீள்விக்கப்பட்டது