பெலாஞ்சோங் கல்தூண்
![]() பெலாஞ்சோங் கல்தூண் (914) | |
செய்பொருள் | எரிமலைப் படிகப்பாறை |
---|---|
எழுத்து | நாகரி, சமசுகிருதம் பழைய பாலினியம் |
உருவாக்கம் | 4 பிப்ரவரி 914 CE[1] |
கண்டுபிடிப்பு | பெலாஞ்சோங், தென் சானூர் பாலி, இந்தோனேசியா |
தற்போதைய இடம் | பெலாஞ்சோங், தென் சானூர் |
பெலாஞ்சோங் கல்தூண் (ஆங்கிலம்: Belanjong Pillar அல்லது Blanjong inscription; இந்தோனேசியம்: Prasasti Blanjong) என்பது இந்தோனேசியா பாலி தீவில் சானூர் (Sanur) எனும் கடற்கரை நகரத்தில், 1932-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்தூணை ஆகும். இந்தக் கல்தூண் 914-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.[1]
இந்தத் தூண், பாலினிய் வருமதேவ அரச மரபின் (Warmadewa dynasty) முதல் அரசரான செரி கேசரி வருமதேவன் என்பவரால் நிறுவப்பட்டது. மேலும் பாலி தீவில், வருமதேவனின் இராணுவ நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு நீண்ட கல்வெட்டையும் கொண்டுள்ளது.[2][3][4]
பெலாஞ்சோங் கல்தூண், தற்போது பெலாஞ்சோங் கோயிலில் உள்ளது. அங்கு ஒரு பாதுகாப்பு உறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து சமயம் சார்ந்த வழிப்பாடுப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டுத் துணியால் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கிறது.
பொது
[தொகு]இந்தக் கல்தூண் சமசுகிருத மொழி, பழைய பாலினிய மொழி ஆகிய இரு மொழிகளில்; நாகரி எழுத்து மற்றும் பழைய பாலினிய எழுத்து முறைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. அந்தக் காலக் கட்டத்தில் ஜாவா, பாலி போன்ற பகுதிகளில் நாகரி எழுத்து மற்றும் பழைய பாலினிய எழுத்து முறைமை பயன்பாட்டில் இருந்துள்ளது.[5][6]
கல்தூணின் ஒரு புறம், நாகரி எழுத்துக்கு முந்தைய பழைய பாலினிய மொழி எழுத்துக்களில் உள்ளது; மறுபுறம் சமசுகிருத பல்லவ எழுத்து முறைமையில் இருந்து பெறப்பட்ட பழைய ஜாவானிய எழுத்துக்களில் உள்ளது. பழைய ஜாவானிய எழுத்துக்கள் தற்போது காவி எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.[7]
இந்தத் தூண் 1932-ஆம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அது தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே இன்றும் உள்ளது.[8]
காட்சியகம்
[தொகு]-
கல்வெட்டின் ஒரு பகுதி.
-
பெலாஞ்சோங் பூங்கா
-
பாதுகாப்பு உறை
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Louis-Charles Damais (1959) "Ouvrages d'Études Indonésiennes", Bulletin d'École française d'Extrême-Orient, 49, 2, pp. 685-686.
- ↑ Louis-Charles Damais (1947) Études balinaises: I. La colonnette de Sanur p. 127
- ↑ Bali handbook with Lombok and the Eastern Isles by Liz Capaldi, Joshua Eliot p. 98 [1]
- ↑ Bali & Lombok Lesley Reader, Lucy Ridout p. 156
- ↑ A short history of Bali by Robert Pringle p. 46
- ↑ The people of Bali Angela Hobart p. 141
- ↑ Haer, p. 275
- ↑ Bali handbook with Lombok and the Eastern Isles Liz Capaldi, p. 98