பெலகோவ்சுகைட்டு
பெலகோவ்சுகைட்டு Belakovskiite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na7(UO2)(SO4)4(SO3OH)(H2O)3 |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் பச்சை |
படிக இயல்பு | இழைகள் |
படிக அமைப்பு | முச்சாய்வு |
பிளப்பு | இல்லை |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் |
அடர்த்தி | 3.31 (கணக்கிடப்பட்டது); 3.23 (அளக்கப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.50, nβ=1.51, nγ=1.52 (தோராயம்) |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
2V கோணம் | 88o (கணக்கிடப்பட்டது) |
பிற சிறப்பியல்புகள் | ![]() |
மேற்கோள்கள் | [1][2][3] |
பெலகோவ்சுகைட்டு (Belakovskiite) என்பது Na7(UO2)(SO4)4(SO3OH)(H2O)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1][2] மிகவும் அரிய ஒரு கனிமமான இது ஐதரோசல்பேட்டு எதிர்மின் அயனியுடன் கூடிய இயற்கையான யுரேனைல் உப்பாக இருப்பது சுவாரசியமானது. இந்த உப்பு அம்சம் மெய்சரைட்டுடன் பகிரப்படுகிறது. பெர்மைட்டு, ஓப்பன்னைமரைட்டு, நேட்ரோசிப்பைட்டு மற்றும் பிளாசிலைட்டு ஆகிய கனிமங்களுடன் வேதியியல் ரீதியாக தொடர்பு கொண்டுள்ளது.[4][5][6][7] யுரேனைல் சல்பேட்டு தாதுக்களில் பெரும்பாலானவை முதலில் அமெரிக்காவின் உட்டாவில் உள்ள சான் இயூவான் மாகாணத்தின் புளூ லிசார்டு சுரங்கத்தில் காணப்பட்டன.[8] கனிமத்திற்கு உருசிய கனிமவியலாளர் திமிட்ரி இலிச் பெலகோவ்சுகியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெலகோவ்சுகைட்டு கனிமத்தை Bkk[9]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பிற தனிமங்களுடன்
[தொகு]செரைட்டு, புளோடைட்டு, பெரினாட்ரைட்டு, குரோகன்கைட்டு மற்றும் மெட்டாவோல்டின் போன்ற மற்ற சல்பேட்டு தாதுக்களுடனும் பெலகோவ்சுகைட்டு தொடர்பு கொண்டுள்ளது.[1] யுரேனியம் கனிமமயமாக்கலுடன் தொடர்புடைய மணற்கல்லில் மலர்ச்சிகளாக இந்த தொடர்பு காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kampf, A.R., Plášil, J., Kasatkin, A.V., and Marty, J., 2014. Belakovskiite, Na7(UO2)(SO4)4(SO3OH)(H2O)3, a new uranyl sulfate mineral from the Blue Lizard mine, San Juan County, Utah, USA. Mineralogical Magazine 78(3), 639-649
- ↑ 2.0 2.1 "Belakovskiite: Belakovskiite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ 3.0 3.1 "Belakovskiite - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. Retrieved 2016-03-10.
- ↑ "Fermiite: Fermiite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Oppenheimerite: Oppenheimerite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Natrozippeite: Natrozippeite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Plášilite: Plášilite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ "Blue Lizard Mine, Chocolate Drop, Red Canyon, White Canyon District, San Juan Co., Utah, USA - Mindat.org". Mindat.org. Retrieved 2016-03-10.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.