பெலகுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெலகுதை எசுகெயின் மகன் ஆவார். செங்கிஸ் கானின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். மேலும் இவர் செங்கிஸ் கானின் தளபதி ஆனார்.[1] பெலகுதை விவேகமான ஆலோசனையாளராகவும், தேர்ந்த தூதுவராகவும் கருதப்பட்டார். பெரும்பாலும் செங்கிஸ் கானால் ஒரு தூதுவராகப் பயன்படுத்தப்பட்டார். செங்கிஸ் கானின் ஆசியுடன் பெலகுதை மங்கோலியர்களின் முதன்மை மல்யுத்த வீரரான புரி போகோவை ஒரு மல்யுத்தப் போட்டியின்போது கழுத்தை ஒடித்துக் கொன்றார். இது முன்னாள் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பழிதீர்ப்பதற்காக நடந்தது. அப்போது புரி போகோ பெலகுதையுடன் சண்டையிட்டு அவரை வாளால் கிழித்தார். ஒரு புராணத்தின்படி பெலகுதை வழக்கத்திற்கு மாறாக அதிக காலம் உயிர்வாழ்ந்தார். ரசித் அத்-தின் இவர் 110ம் வயதில் இறந்ததாகக் குறிப்பிடுகிறார். யுவான்ஷியானது கி.பி. 1251ல் கானின் முடிசூட்டுதலின்போது இவர் உயிருடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. அப்போது இவரது வயது 100ஐ நெருங்கியிருக்கலாம். அதன்படி இவர் அந்நேரத்தில் உலகிலேயே வயதான மனிதர்களுள் ஒருவராக இருந்திருக்கலாம். ஆனால் அந்நேரத்தில் மனிதர்களின் சராசரி வயது இதை நம்புவதற்குக் கடினமானதாக ஆக்குகிறது.

பரம்பரை[தொகு]

ஓவலுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எசுகெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
போர்ட்டே
 
தெமுசின் (செங்கிஸ் கான்)
 
கசர்
 
கச்சியுன்
 
தெமுகே
 
பெலகுதை
 
பெக்தர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூச்சி
 
 
சகதாயி
 
 
 
ஒக்தாயி
 
 
டொலுய்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலகுதை&oldid=3460299" இலிருந்து மீள்விக்கப்பட்டது