பெர் ஒலோப் ஹல்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெர் ஒலோப் ஹல்த் (2 ஜூன் 1943 - 26 பிப்ரவரி 2015)என்பவர் ஒரு  ஸ்வீடிஷ் வானியல் துகள் இயற்பியலாளர்

ஹல்த் ஸ்டாக்ஹோமில் வளர்ந்தார். அவர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டில் துகள் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் பல ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தில் பரிசோதனை வானியல் துகள் இயற்பியல் பேராசிரியராக இயற்பியல் துறையில் தலைமை வகித்தார். ஹில்ட் ஜெனீவாவில் CERN இல் பணியாற்றினார் மற்றும் தென் துருவத்தில் உள்ள AMANDA திட்டத்தில் துருவ பனிப்பகுதியில் இருந்து நியூட்ரினோக்களைப் பற்றி படித்தறிவதில் முக்கிய ஐரோப்பிய பங்கேற்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார்.  2001 முதல் 2005 வரை இதன் செய்தி தொடர்பாளர் ஆக செயல்பட்டார்.[1]

ஹல்த் 2004 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் இயற்பியல் வகுப்பின் உறுப்பினராக ஆனார்.[2] அவர் ராயல் அகாடமி கல்விக் குழுவின் தலைவராகவும் 2013 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் இலாப நோக்கற்ற சுயாதீனமான முதன்மை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கான தேசிய தடை யை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய விமர்சகர் ஆகவும் செயல்பட்டார்..[3][4]

அவர் ஃபெரோனிங்கென் வெட்டன்ஸ்காப் மற்றும் ஃபோல்க்பிட்னிங்கின் .” தி ஸ்வீடிஷ் ஸ்கெப்டிக்ஸ் ” சங்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார், மேலும் 1988 முதல் 1998 வரை இவ்வமைப்பின் தலைவராக பணியாற்றினார்.

பெர் ஓலோப் ஹல்த் சமூக ஜனநாயக அரசியல்வாதி மற்றும் ஸ்டாக்ஹோம் நகரசபையின் முன்னாள் ஆணையர் மாட்ஸ் ஹல்த்தின் மூத்த சகோதரர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stockholms universitet: Ett nytt fönster mot universum பரணிடப்பட்டது 2007-12-10 at the வந்தவழி இயந்திரம், 12 September 2005
  2. "Kungl". Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. Svenska Dagbladet: Sätt stopp för vinstuttag i skolan, 27 March 2013
  4. Dagens Arena: ”Det fria skolvalet underminerar läraryrkets status” 27 March 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்_ஒலோப்_ஹல்த்&oldid=3724873" இலிருந்து மீள்விக்கப்பட்டது