பெர்ரைட்டு
Jump to navigation
Jump to search
பெர்ரைட்டு (Berryite) என்பது Pb3(Ag,Cu)5Bi7S16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒற்றைச்சரிவச்சு பட்டகங்களாக சாம்பல் நிறம் முதல் நீலம் கலந்த சாம்பல் நிறம் வரையிலான நிறங்களில் இக்கனிமம் கிடைக்கிறது. ஒளிபுகாத உலோகத் தன்மை கொண்ட பெர்ரைட்டு மோவின் அளவுகோலில் 3.5 என்ற கடினத்தன்மை அளவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ஒப்படர்த்தி 6.7 ஆகும்.
எக்சு கதிர் விளிம்பு வளைவு சோதனையின் மூலம் முதன் முதலில் பெர்ரைட்டு 1965 ஆம் ஆண்டு லியோனார்டு கேசுகோயின் பெர்ரியால் (1914-1982) கண்டறியப்பட்டது. கொலராடோ நாட்டின் பார்க் மற்றும் சான் யுவான் மாகாணங்களில் பெர்ரைட்டு அதிக அளவில் கிடைக்கிறது. கொலராடோவில் சல்பைடைக் கொண்டுள்ள குவார்ட்சு விளிம்புப் பகுதிகளிலும் கிரீன்லாந்தில் சிடரைட்டு மிகுந்த கிரையோலைட்டிலும் பெர்ரைட்டு காணப்படுகிறது.