பெர்யால் ஓசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்யால் ஓசல்
பிறப்பு(1975-05-27)மே 27, 1975
இசுதான்புல், துருக்கி

பெர்யால் ஓசல் (Feryal Özel) (born May 27, 1975) ஒரு துருக்கிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் துருக்கியில் உள்ள இசுதான்புல்லில் பிறந்தார்.இவர் செறிந்த பொருள்களின் இயற்பியலிலும் உயர் ஆற்றல் வானியற்பியல் நிகழ்வுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் நொதுமி விண்மீன்கள், கருந்துளைகள், காந்தமீன்கள் ஆய்வுக்காக பெயர்பெற்றவ்ர் ஆவார்.இவர் டசுக்கனில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானியல் துறை, சுட்டீவர்டு வான்காணகம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார். இவர் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் இருந்து வானியற்பியலில் நொதுமி விண்மீன்களின் சிறந்த ஆய்வுப் பங்களிப்புகளுக்காக [2] மரியா கோயெப்பர் விருதினைப் பெற்றார்.

இவர் தன் முனைவர் பட்டத்தை ஆர்வார்டு பலகலிக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் நியூஜெர்சி, பிரின்சுடன் உயராய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் அபுள் ஆய்வுநல்கை உறுப்பினராகவும் இருந்துவருகிறார்.[1] இவர் ஆர்வார்டு-இராடுகிளிப் நிறுவன ஆய்வுறுப்பினராகவும் at the பெர்க்கேலி கொலராடோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார் . இவர் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவற்றில் Big Ideas on PBS, அமெரிக்க வரலாற்றுத் தொடரின் புடவிசார் வரிசை ஆகியவை அடங்கும்.

கல்வி[தொகு]

  • 1992 – ஊசுகூதர் அமெரிக்க கல்விக்கழகம், இசுதான்புல், துருக்கி
  • 1996 – இளமறிவியல், இயற்பியலும் பயன்முறைக் கணிதவியலும், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகர்
  • 1997 - மூதறிவியல், இயற்பியல், நீல்சு போர் நிறுவனம், கோப்பனேகன்
  • 2002 – முனைவர் பட்டம், வானியற்பியல், ஆர்வார்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், அமெரிக்கா

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • மில்லர் கட்டில் வருகைதரு பேராசிரியர் , பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2014
  • அமெரிக்க இயற்பியல் கழக மரியா கோயெப்பெர்ட் மேயர் விருது 2013
  • ஆய்வுநல்கை, இராட்கிளிப் உயர்நிலை ஆய்வு நிறுவனம் 2012-13
  • ஆர்வார்டு பல்கலைக்கழக பார்க் ஜே. போக் பரிசு 2010
  • சாந்தியாகோ வானியல் கழக உலூகாசு விருது 2010
  • துருக்கி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அறக்கட்டளை வருகைதரு அறிஞர் ஆய்வுநல்கை 2007
  • அபுள் முதுமுனைவர் ஆய்வுநல்கை 2002-2005
  • தனித்தகவு அறிஞர் விருது, அத்தூர்க் செல்விகள் அறக்கட்டளை 2003
  • கெக் ஆய்வுநல்கை, உயர்நிலை ஆய்வு மையம் 2002
  • வான் விளாக் ஆய்வுநல்கை, ஆர்வார்டு பல்கலைக்கழகம் 1999
  • கோசுடிரப் பரிசு, நீல்சுபோர் நிறுவனம் 1997
  • நீல்சுபோர் நிறுவனப் பட்டப்படிப்பு ஆய்வுநல்கை 1996-1997
  • பயன்முறைக் கணிதவியல் புல விருது, கொலம்பியா பல்கலைக்கழகம், 1996
  • ஃபூ அறகட்டளை உதவிநல்கை, கொலம்பியா பல்கலைக்கழகம் 1994-1996
  • செர்ன் (CERN) ஆராய்ச்சி நல்கை 1995
  • துருக்கி உடல்நலக் கல்வி அறக்கட்டளை உதவிநல்கை 1992-1994

மேற்கோள்கள்[தொகு]

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு] School of Natural Sciences, Institute for Advanced Study, Princeton, website

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்யால்_ஓசல்&oldid=3384948" இலிருந்து மீள்விக்கப்பட்டது