பெர்போரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்போரைட்டு
Berborite
நேட்ரோலைட்டின் மீது பெர்போரைட்டு
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBe2(BO3)(OH,F)•H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்பு1T பல்வகை பல்லுரு: முக்கோணம்
2H பல்வகை பல்லுரு: அறுகோணப் படிகம்
2T பல்வகை பல்லுரு: முக்கோணம்
இரட்டைப் படிகமுறல்பலபாகங்கள்
பிளப்பு{0001} சரிபிளவு
முறிவுசமமற்றது – பிளவில்லாத தட்டை மேற்பரப்பு சமமற்ற வகை விரிசல்.
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
அடர்த்தி2.2
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.580 nε = 1.485
இரட்டை ஒளிவிலகல்δ = 0.095
புறவூதா ஒளிர்தல்none
மேற்கோள்கள்[1][2][3][4]

பெர்போரைட்டு (Berborite) என்பது Be2(BO3)(OH,F)·(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதை பெரிலியம் போரேட்டு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். வெள்ளைக் கீற்றுகளுடன் பளப்பளப்புடன் ஒளி புகக்கூடிய நிறமற்றதொரு கனிமமாக இது காணப்படுகிறது. 3 என்ற மோவின் அளவுகோல் [2] கடினத்தன்மை மதிப்பைக் கொண்ட பெர்போரைட்டு கதிரியக்கத்தன்மை இல்லாத கனிமமாகவும் உள்ளது. பொருளறிவியல் வகைப்பாட்டில் பெர்போரைட்டு 1தி, 2தி, 2எச் வகை பல்வகை பல்லுருவங்களாக தோன்றுகிறது

முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு உருசியாவின் கரேலியா குடியரசின் லதோகா பிரதேசத்திலுள்ள லுபிக்கோ சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. நார்வே நாட்டின் வெசுட்டுபோல்டு மாகாணத்திலுள்ள லார்விக் நகரிலும், தெலிமார்க் மாகாணத்தின் போர்சுகிரண் நகர லாங்கசுண்ட்சுபோர்டு நகராட்சியிலும் கிடைப்பதாக அறியப்படுகிறது [1][3]. உருசியாவில் செர்பென்டைன் வகை பாறைகள் உருமாறி தோலமைட்டாக கரடுமுரடான பரல்களுடன் தங்குதன், இசுட்ரோன்சியம், பெரிலியம், போரான் தனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. நார்வே நாட்டிலுள்ள பாறைக் குழிகளில் நேட்ரோலைட்டு, தாம்சோனைட்டுடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது [2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்போரைட்டு&oldid=2730855" இலிருந்து மீள்விக்கப்பட்டது