பெர்னார்ட் பொசன்குவெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்னார்ட் பொசன்குவெட்
Bernard Bosanquet Vanity Fair 15 September 1904.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்டிசம்பர் 11 1903 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 5 1905 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 235
ஓட்டங்கள் 147 11,696
மட்டையாட்ட சராசரி 13.36 33.41
100கள்/50கள் 0/0 21/63
அதியுயர் ஓட்டம் 27 214
வீசிய பந்துகள் 970 26,559
வீழ்த்தல்கள் 25 629
பந்துவீச்சு சராசரி 24.16 23.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 45
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 11
சிறந்த பந்துவீச்சு 8/107 9/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/0 190/0
மூலம்: [1], அக்டோபர் 17 2010

பெர்னார்ட் பொசன்குவெட் (Bernard Bosanquet ), அக்டோபர் 13 1877, இறப்பு: அக்டோபர் 12 1936 ) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு 15696 ஓட்டங்களை எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1903 -05 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.அதில் 147 ஓட்டங்களையும் 25 இழப்புகளையும் கைப்பற்றியுள்ளார்.

பொசன்குவெட், ஏடன் கல்லூரியில் துடுப்பாட்டம் விளையாடுவதற்கு முன்பாக இவர் 1891 முதல் 1896 வரை ஓரியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டுவில் துடுப்பாட்டத்திற்காக புளூ பெற்றார். இவர் ஒரு வெற்றிகரமான மட்டையாளரக இருந்தார். இவர் 1898 மற்றும் 1900 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்காக விளையாடும் போது விரைவு வீச்சாளராக பந்து வீசினார். ஒரு மாணவராக, இவர் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.டேப்லொப் விளையாட்டை விளையாடும்போது, பொசன்குவெட் புதிய முறையில் பந்தினை வீசினார். பின்னர் அதற்கு "கூக்லி" என்று பெயரிட்டார், இவர் ஆக்ஸ்போர்டில் இருந்த காலத்தில் துடுப்பாட்டத்தில் கூக்ளியினை பயிற்சி செய்தார். இவர் முதன்முதலில் 1900 ஆம் ஆண்டில் துடுப்பாட்ட போட்டிகளில் கூக்ளியினை பயன்படுத்தினார். அதனால், விரைவாக பந்துவீசுவதனைக் கைவிட்டார். இவரது பந்துவீச்சு தேர்வாளர்களின் கவனத்தினை ஈர்த்தது. பல துடுப்பாட்ட வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குச் சென்றதால், 1903-04ல் ஆத்திரேலியாவின் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்கு (எம்.சி.சி) எதிரான சுற்றுப்பயணத்திற்கு பொசன்குவெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். மட்டையாளராக சிறப்பாக விளையாடத் தவறினாலும் பந்துவீச்சில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பொசன்குவெட் 1877 அக்டோபர் 13 அன்று மிடில்செக்ஸின் என்ஃபீல்டில் உள்ள புல்ஸ் கிராஸில் பிறந்தார். இவர் பெர்னார்ட் டிண்டல் பொசன்குவெட் மற்றும் ஈவா மட் காட்டன் ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவராகராகப் பிறந்தார். பொசன்குவெட்டுக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இவரது மாமா மற்றும் தத்துவஞானியான் பெர்னார்ட் போசான்வெட் உட்பட இவரது பல உறவினர்கள் பரவலாக நன்கு அறியப்பட்டவர்கள் ஆவர். [1] இவரது தாத்தா ஜேம்ஸ் வாட்மேன் பொசன்குவெட் ஒரு வங்கியாளராக இருந்தார், விவிலிய வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தார். இவரது தந்தை பொசன்குவெட் & கோ என்ற வங்கி நிறுவனத்தில் பணிபுரிந்தார், மேலும் லண்டனில் மறை, தோல் வணிக நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார். இவர் 1897 முதல் 1898 வரை என்ஃபீல்ட் துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக இருந்தார். [2] [3] இவரது தாத்தா சர் நிக்கோலா கோனிங்காம் டிண்டால் 1829 மற்றும் 1846ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் தலைமை நீதிபதியாக இருந்தார் .

ஸ்லோவில் உள்ள சன்னிமீட் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியினைக் கற்றார். பின், பொசன்குவெட் 1891 மற்றும் 1896 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏடன் கல்லூரியில் பயின்றார். [4] ஏடனில் இருந்தபோது, சர்ரே நிபுணர்களான மாரிஸ் ரீட் மற்றும் பில் ப்ரோக்வெல் ஆகியோரிடமிருந்து துடுப்பாட்ட பயிற்சியைப் பெற்றார். இவர் 1896 ஆம் ஆண்டில் முதல் பதினொரு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். [5] வின்செஸ்டர் கல்லூரித் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்று இழக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் எடுத்தார்.பின்னர் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் ஹாரோ பள்ளிக்கு எதிரான போட்டியில் இவர் 140 நிமிடங்களில் 120 ஓட்டங்கள் எடுத்தார். [6] [7] இந்த நேரத்தில், இவர் விரைவு வீச்சாளராகப் பந்து வீசினார்.

சான்றுகள்[தொகு]

  1. Green, p. 176.
  2. Williams, Glenys (2004). "Bosanquet, Bernard James Tindal (1877–1936)". Oxford University Press. (subscription or UK public library membership required)
  3. McConnell, Anita (2004). "Bosanquet, James Whatman (1804–1877)". Oxford University Press. (subscription or UK public library membership required)
  4. Williams, Glenys (2004). "Bosanquet, Bernard James Tindal (1877–1936)". Oxford University Press. (subscription or UK public library membership required)
  5. "Bernard Bosanquet". London: John Wisden & Co. (1937).
  6. "Player Oracle BJT Bosanquet". CricketArchive.
  7. "Eton College v Harrow School in 1896". CricketArchive.